பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : ஆக 27, 2021
Share
Advertisement
உலமா அடையாள அட்டைமதுரை கலெக்டர் அனீஷ்சேகர் கூறியுள்ளதாவது: தமிழக அரசு சிறுபான்மையினர் நலத்துறை மூலம் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் இயங்குகிறது. பள்ளிவாசல், தர்க்கா, மதராஸாக்களில் பணிபுரியும் 18 முதல் 60 வயது இரு பாலரும் வாரியத்தில் உறுப்பினராகி அடையாள அட்டை பெறலாம். அவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமணம், மகப்பேறு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட

உலமா அடையாள அட்டை

மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் கூறியுள்ளதாவது: தமிழக அரசு சிறுபான்மையினர் நலத்துறை மூலம் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் இயங்குகிறது. பள்ளிவாசல், தர்க்கா, மதராஸாக்களில் பணிபுரியும் 18 முதல் 60 வயது இரு பாலரும் வாரியத்தில் உறுப்பினராகி அடையாள அட்டை பெறலாம். அவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமணம், மகப்பேறு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து உறுப்பினர் அடையாள அட்டை பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்ட உலமாக்கள் ஓய்வூதியம் பெறலாம் என கூறியுள்ளார்.

குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் மதுரை மாவட்டத்தில் 2021-2022 நிதியாண்டிற்கு தாட்கோ திட்டம் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவியருக்கு குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் தேவைப்படும் பயிற்சி மேற்கொள்ள www.training.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். போக்குவரத்து படிகள் வழங்கப்படும். பயிற்சி முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எஸ்.சி.வி.டி., / எஸ்.எஸ்.சி., சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்து சான்று பெற்றவர்கள் தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பு திட்டங்களில் பயன்பெறலாம் என கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X