பொது செய்தி

தமிழ்நாடு

படகு சவாரி கட்டணம் உயர்வு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கிள்ளை-பிச்சாவரம் தமிழ்நாடு படகு இல்லங்களின் படகு சவாரி கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வனச் சுற்றுலா மையத்தில், சதுப்பு நிலக்காடுகளுடன், சுரபுண்ணை எனும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்திருப்பதால், உலகளவில் சிறப்பு வாய்ந்தது. சுற்றுலா மையத்திற்கு தினமும், உள்ளூர்,

கிள்ளை-பிச்சாவரம் தமிழ்நாடு படகு இல்லங்களின் படகு சவாரி கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வனச் சுற்றுலா மையத்தில், சதுப்பு நிலக்காடுகளுடன், சுரபுண்ணை எனும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்திருப்பதால், உலகளவில் சிறப்பு வாய்ந்தது. சுற்றுலா மையத்திற்கு தினமும், உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் 21ல் பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடப்பட்டது. நான்கு மாதங்களுக்கு பிறகு கடந்த 23ம் தேதி திறக்கப்பட்டது. தற்போது, தமிழ்நாடு படகு இல்லத்தால் இயக்கப்படும் படகு சவாரி கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.படகு சவாரி செய்ய வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் என இரு வகையாக கட்டணங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. வார நாட்களில் படகு சவாரி செய்ய 40 நிமிடத்திற்கு, மோட்டார் படகு பழைய கட்டணம் ரூ. 1500, தற்போது ரூ. 1800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நான்கு பேர் செல்லும் துடுப்பு படகு, பழைய கட்டணம் ரூ. 340, தற்போது ரூ. 400 ; 6 பேர் துடுப்பு படகு, பழைய கட்டணம் ரூ. 500, தற்போது ரூ. 600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.வார இறுதி நாட்கள் ( சனி, ஞாயிறு) 40 நிமிட மோட்டார் படகு சவாரிக்கு ரூ. 2000; 4 பேர் துடுப்பு படகு ரூ. 450; 6 பேர் துடுப்பு படகு ரூ. 650 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.வனத்துறை படகுகளுக்கு கிராக்கிபிச்சாவரம் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா மேலாண்மை குழு மூலமாகவும் படகுகள் இயக்கப்படுகிறது. அந்த படகுகளில், படகு சவாரி செய்ய கட்டணம், தமிழ்நாடு படகு இல்லத்தால் இயக்கப்படும் படகு கட்டணத்தைவிட மிக குறைவாகவே உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் இங்கு செல்கின்றனர்.மோட்டார் படகு 40 நிமிடத்திற்கு ரூ. 1160 ; 30 நிமிடத்திற்கு ரூ. 870; ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1725 ஆக உள்ளது. படகு கட்டணம் மிக குறைவாக உள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்து, வனத்துறை மூலம் இயக்கப்படும் படகுகளுக்கே அதிகளவில் செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X