சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய  பெயிண்டருக்கு 10 ஆண்டு சிறை

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கடலுார்,-இளம் பெண்ணை கர்ப்பமாக்கி, திருமணம் செய்ய மறுத்த பெயிண்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கடலுார் மகிளா கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.கடலுார் அடுத்த பழைய வண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் மணிகண்டன், 29; பெயிண்டர். இவர், கடலுாரில் கடையில் வேலை செய்யும் 25 வயது இளம்பெண்ணை காதலித்தார். கடந்த 18.4.2018ம் தேதி அப்பெண்ணிடம் திருமணம் பற்றி பேச, வீட்டுக்கு

கடலுார்,-இளம் பெண்ணை கர்ப்பமாக்கி, திருமணம் செய்ய மறுத்த பெயிண்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கடலுார் மகிளா கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.கடலுார் அடுத்த பழைய வண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் மணிகண்டன், 29; பெயிண்டர். இவர், கடலுாரில் கடையில் வேலை செய்யும் 25 வயது இளம்பெண்ணை காதலித்தார். கடந்த 18.4.2018ம் தேதி அப்பெண்ணிடம் திருமணம் பற்றி பேச, வீட்டுக்கு வருமாறு அழைத்தார். இதை நம்பி அவர், வீட்டுக்கு சென்றபோது, அங்கு அவரது குடும்பத்தினர் யாரும் இல்லை. அப்போது, மணிகண்டன், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவருடன் உல்லாசமாக இருந்தார்.இதில் அப்பெண் கர்ப்பமடைந்தார். திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். பெற்றோருக்கு தெரிந்தால் பிரச்னை ஆகிவிடும் என்ற மணிகண்டன், மாத்திரை வாங்கி கொடுத்து, கருவை கலைத்துள்ளார்.பின், 16.6.2018ம் தேதி இளம்பெண், மணிகண்டனிடம் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். பெற்றோர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவுசெய்துள்ளனர். அப்பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு பெற்றோருக்கு தெரியாமல் நாம் குடும்பம்நடத்தலாம் என கூறியுள்ளார்.அப்பெண் மனமுடைந்து, வீட்டில் துாக்குப்போட்டுக் கொண்டார். அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மரில் சேர்த்தனர்.சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அவர், கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில் மணிகண்டனை போலீசார் கைது செய்து, கடலுார் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்குவிசாரணை முடிந்து, நீதிபதி பாலகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு அளித்தார். குற்றவாளி மணிகண்டனுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை, ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தும், அதில், ரூ. 40 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் செல்வபிரியா ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X