சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உளுந்துார்பேட்டையில் 2 லாரிகள் மோதி விபத்து

Added : ஆக 27, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே 2 லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் லாரிகளை அப்புறப்படுத்த முடியாததால் 3 மணி நேரத்திற்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது.துாத்துக்குடியில் இருந்து நேற்று, 25 டன் உப்பு ஏற்றிய லாரி சென்னைக்குச் சென்று கொண்டிருந்தது. லாரியை தென்காசி அடுத்த நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த சிவகண்டன் மகன் பக்தராஜா, 36;

உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே 2 லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் லாரிகளை அப்புறப்படுத்த முடியாததால் 3 மணி நேரத்திற்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது.துாத்துக்குடியில் இருந்து நேற்று, 25 டன் உப்பு ஏற்றிய லாரி சென்னைக்குச் சென்று கொண்டிருந்தது. லாரியை தென்காசி அடுத்த நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த சிவகண்டன் மகன் பக்தராஜா, 36; ஓட்டினார்.நேற்று மாலை 5:00 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நான்கு முனை சந்திப்பு சாலையை லாரி கடக்க முயன்றது.அப்போது விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் இருந்து ஜல்லி ஏற்றிக் கொண்டு உளுந்துார்பேட்டை நோக்கி வந்த லாரி அதிவேகமாக திரும்பியது. அதில் எதிரே வந்த உப்பு லோடு லாரி மீது மோதியது.இந்த விபத்தில் உப்பு லோடு லாரி டிரைவர் பக்தராஜா படுகாயமடைந்தார். உடன் அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.விபத்துக்குக் காரணமான ஜல்லி லோடு லாரி டிரைவர் தலைமறைவானார்.இந்த விபத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.விபத்துக்குள்ளான வாகனங்களை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அப்புறப்படுத்த 2 ராட்சத கிரேன்களைக் கொண்டு அப்புறப்படுத்த முயன்றனர்.ஆனால், லாரிகளை அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால், வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இரவு 8:00 மணிக்கு மேலும் லாரிகளை அப்புறப்படுத்த முடியாததால் போக்குவரத்து பாதிப்பு தொடர்ந்தது.விபத்து குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருவதுடன் விபத்து ஏற்படுத்தி தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X