சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்விரோத தகராறில் பைக்கை எரித்த நபர் கைது

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கண்டமங்கலம்-கண்டமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக பைக்கை எரித்த நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த ஆழியூர் புதிய காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ், 38; கூலித்தொழிலாளி. இவரது அண்ணன் ரமேஷின் மொபைல் போனை ஒரு மாதத்திற்கு முன்அதே பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் யோகேஷ் 21; திருடியுள்ளார்.ரமேஷ் போலீசில் புகார் கொடுக்கச் சென்ற போது, மொபைல்

கண்டமங்கலம்-கண்டமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக பைக்கை எரித்த நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த ஆழியூர் புதிய காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ், 38; கூலித்தொழிலாளி. இவரது அண்ணன் ரமேஷின் மொபைல் போனை ஒரு மாதத்திற்கு முன்அதே பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் யோகேஷ் 21; திருடியுள்ளார்.ரமேஷ் போலீசில் புகார் கொடுக்கச் சென்ற போது, மொபைல் போனை யோகேஷ் திருப்பிக் கொடுத்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் அங்கு வந்த ரமேஷ் தம்பி சுரேஷ்,யோகேஷை தாக்கினார். இதனால், அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், நேற்று அதிகாலை சுரேஷ் வீட்டின் முன் நிறுத்தியிருந்த அவரது டிஸ்கவர் பைக்கை யோகேஷ் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு தப்பிச் சென்றார்.இது குறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து யோகேஷை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X