குடிமகனை அப்புறப்படுத்த முடியாமல் திணறிய போலீசார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

' குடிமகனை அப்புறப்படுத்த முடியாமல் திணறிய போலீசார்

Added : ஆக 27, 2021
Share
விருத்தாசலம்--விருத்தாசலம் அருகே போலீஸ் ஸ்டேஷன் முன் ஹாயாக படுத்து துாங்கிய குடிமகனை, அப்புறப்படுத்த முடியால் போலீசார் திணறிய சம்பவம் அரங்கேறி உள்ளது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திற்கு நேற்று மாலை 6:30 மணியளவில், போதை தலைக்கேறிய நிலையில்40 வயது போதை ஆசாமி ஒருவர் வந்தார்.அப்போது, சிலர் போலீசாரிடம் புகார்

விருத்தாசலம்--விருத்தாசலம் அருகே போலீஸ் ஸ்டேஷன் முன் ஹாயாக படுத்து துாங்கிய குடிமகனை, அப்புறப்படுத்த முடியால் போலீசார் திணறிய சம்பவம் அரங்கேறி உள்ளது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திற்கு நேற்று மாலை 6:30 மணியளவில், போதை தலைக்கேறிய நிலையில்40 வயது போதை ஆசாமி ஒருவர் வந்தார்.அப்போது, சிலர் போலீசாரிடம் புகார் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு போலீசார் பதில் கூறுவதற்கு முன் போதை ஆசாமி பதில் சொன்னார்.அவரை யாரும் பொருட்படுத்தாததால் போதை மயக்கத்தில், வெளியே சென்று போலீஸ் ஸ்டேஷன் முன் மல்லாக்க படுத்தார். சற்று நேரத்தில் துாங்க ஆரம்பித்தார். இதைப்பார்த்த போலீசார், ஸ்டேஷன் வளாகத்தை விட்டு வெளியே செல்லுமாறு அவரிடம் கெஞ்சினர்.அதை 'குடிமகன்' பொருட்படுத்தாமல் குறட்டை விட்டு துாங்கினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, போலீஸ் ஸ்டேஷன் வாசல் முன் துாங்கிய அவர், போதை தெளிந்து தானாக எழுந்து சென்றார். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல் என பல பிரச்னைகளுக்கு துணிவாக முடிவெடுக்கும் போலீசார், குடிமகன் விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X