சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்துரூ. 2.50 லட்சம் நகை திருட்டு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
மந்தாரக்குப்பம்-கடலுார் மாவட்டம், மந்தாரக்குப்பம், பெரியாக்குறிச்சி, நாராயணன் நகரை சேர்ந்த சாமிதுரை மகன் சரண்ராஜ், 30; மந்தாரக்குப்பத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் ஆண்டிமடத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் சரண்ராஜ் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பகல் 2 மணியளவில்

மந்தாரக்குப்பம்-கடலுார் மாவட்டம், மந்தாரக்குப்பம், பெரியாக்குறிச்சி, நாராயணன் நகரை சேர்ந்த சாமிதுரை மகன் சரண்ராஜ், 30; மந்தாரக்குப்பத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் ஆண்டிமடத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் சரண்ராஜ் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பகல் 2 மணியளவில் சாப்பிட திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, நகை பெட்டியில் வைத்திருந்த 10.25 சவரன் நகைகள் திருடு போயிருந்தன. அதன் மதிப்பு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். புகாரின் பேரில், மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X