என்.எல்.சி., ஊழியர் வீட்டில் ரூ. 4 லட்சம் நகை திருட்டு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

என்.எல்.சி., ஊழியர் வீட்டில் ரூ. 4 லட்சம் நகை திருட்டு 

Added : ஆக 27, 2021
Share
பண்ருட்டி-பண்ருட்டி அருகே என்.எல்.சி. ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான தங்க நகை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நடுக்குப்பம் நன்னிக்குப்பம் தெருவை சேர்ந்தவர் முருகவேல்,54; என்.எல்.சி., சுரங்க போர்மேன். இவர் நேற்று காலை 10:00 மணியளவில் மனைவியுடன் உறவினர் வீட்டின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றார். பிற்பகல்

பண்ருட்டி-பண்ருட்டி அருகே என்.எல்.சி. ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான தங்க நகை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நடுக்குப்பம் நன்னிக்குப்பம் தெருவை சேர்ந்தவர் முருகவேல்,54; என்.எல்.சி., சுரங்க போர்மேன். இவர் நேற்று காலை 10:00 மணியளவில் மனைவியுடன் உறவினர் வீட்டின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றார். பிற்பகல் 1:00 மணிக்கு வீடு திரும்பிய போது வீட்டின் முன் பக்க கீரில் கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், படுக்கை அறையில் இருந்த 14 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றிருந்தனர். திருடு போன நகைகளின் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும்.இது குறித்து முருகவேல் மனைவி புவியரசி,48; கொடுத்த புகாரின்பேரில் டி.எஸ்.பி.,சபியுல்லா, காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், முத்தாண்டிக் குப்பம், சப் இன்ஸ்பெக்டர் தவசெல்வம் சென்று விசாரித்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைத்து 2 கி.மீ., சென்று நின்றது. தடய அறிவியல் நிபுணர் டி.எஸ்.பி.ஸ்ரீதர் தலைமையில் தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்கள் சேகரித்தனர். முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X