கடலில் குளித்த வாலிபர் மாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலில் குளித்த வாலிபர் மாயம்

Added : ஆக 27, 2021
Share
கடலுார்-கடலுார் அருகே கடலில் குளித்த போது மாயமான வாலிபரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். கடலுார் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் வெங்கட்ராமன், 21; கடலுார் சிப்காட்டில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று மாலை 5 மணியளவில் நண்பர்களுடன், சொத்திக்குப்பம் முகத்துவாரம் பகுதியில் குளிக்க சென்றார். அப்போது, அவர் அலையில் சிக்கி,

கடலுார்-கடலுார் அருகே கடலில் குளித்த போது மாயமான வாலிபரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். கடலுார் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் வெங்கட்ராமன், 21; கடலுார் சிப்காட்டில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று மாலை 5 மணியளவில் நண்பர்களுடன், சொத்திக்குப்பம் முகத்துவாரம் பகுதியில் குளிக்க சென்றார். அப்போது, அவர் அலையில் சிக்கி, கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். நண்பர்கள் கூச்சலிட்டதால், அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்க முயன்றனர். அதற்குள் வெங்கட்ராமன் மாயமானார்.தகவலறிந்த சிப்காட் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X