மதுரை : தினமலர் செய்தி எதிரொலியாக மதுரை அரசு மருத்துவமனை முன் ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனை முன் ஆட்டோக்கள் பயணிகளை அழைத்துச்செல்ல காத்திருப்பதால் போக்குவரத்து பாதிக்கிறது. விபத்து அபாயமும் உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன்எதிரொலியாக போக்குவரத்து துணைகமிஷனர் ஈஸ்வரன், உதவிகமிஷனர் மாரியப்பன் நேற்று சில மாறுதல்களை செய்துள்ளனர்.
கலெக்டர் அலுவலகம் பகுதியில் இருந்து கோரிப்பாளையம் நோக்கி வரும் ஆட்டோக்கள், மருத்துவமனை பிரேத பரிசோதனை அறைக்கு செல்லும் ரோட்டில் சென்று வலதுபுறம் திரும்பவேண்டும்.
வைகை கரையோரம் சென்று யானைக்கல் செல்ல தரைப்பாலம், செல்லுார் பகுதிக்கு செல்ல குமரன் சாலை, கோரிப்பாளையம் செல்ல ஆழ்வார்புரம் வழியை பயன்படுத்த வேண்டும்.உதவிகமிஷனர் கூறுகையில், ''சோதனை முயற்சியாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரவேற்பை பொருத்து தொடர்வது குறித்து முடிவெடுக்கப்படும்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE