பொது செய்தி

இந்தியா

நம்பிக்கை: வேலையின்மை, வறுமை இல்லாத புதுச்சேரிசட்டசபையில் கவர்னர் தமிழிசை பேச்சு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
புதுச்சேரி-'வறுமை மற்றும் வேலையின்மை இல்லாத, வளமைமிக்க புதுச்சேரியை இந்த அரசு உருவாக்கும்' என கவர்னர் தமிழிசை கூறியுள்ளார்.புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் நேற்று காலை துவங்கியது.கவர்னர் தமிழிசை, காலை 9:30 மணிக்கு சட்டசபைக்கு வருகை தந்தார். அவருக்கு, போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.சபாநாயகர் செல்வம், சட்டசபை
 நம்பிக்கை: வேலையின்மை, வறுமை இல்லாத புதுச்சேரிசட்டசபையில் கவர்னர் தமிழிசை பேச்சு

புதுச்சேரி-'வறுமை மற்றும் வேலையின்மை இல்லாத, வளமைமிக்க புதுச்சேரியை இந்த அரசு உருவாக்கும்' என கவர்னர் தமிழிசை கூறியுள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் நேற்று காலை துவங்கியது.கவர்னர் தமிழிசை, காலை 9:30 மணிக்கு சட்டசபைக்கு வருகை தந்தார். அவருக்கு, போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.சபாநாயகர் செல்வம், சட்டசபை செயலர் முனிசாமி ஆகியோர், கவர்னரை வரவேற்று, மைய மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை நிகழ்வு துவங்கியது.

அதனைத் தொடர்ந்து, சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரை துவக்கி வைத்து, கவர்னர் தமிழிசை உரையாற்றியதாவது:சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், புதுச்சேரி மாநில மக்கள், முதல்வர் ரங்கசாமி தலைமையிலான கூட்டணி மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்துள்ளனர்.இந்த புதிய அரசு, புதுச்சேரியில் வளர்ச்சி, வளம் மற்றும் மாநிலத்தின் அமைதி ஆகியவற்றில் சிறந்து விளங்க பாடுபடும் என நம்புகிறேன்.கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் புதுச்சேரியிலும் எதிரொலித்தது. எனினும், அரசு துரிதமாக செயல்பட்டு, கொரோனா பரவலை கட்டுப்படுத்தியது.கொரோனாவால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பாடுபட்ட மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.கொரோனாவில் இருந்து மக்களை காத்திட அரசு அவ்வப்போது மேற்கொண்ட ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது.கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் அனைவரும் உடனே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.கடந்த 2020-21 நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கான ரூ.9,000 கோடியில், ரூ.8,419 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது, இலக்கில் 94 சதவீதமாகும்.ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 9,000 கோடியில், அரசு ரூ8,342 கோடி செலவு செய்துள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் 93 சதவீதமாகும். கொரோனா பரவல் சூழ்நிலையிலும், கணிசமான வருவாய் கிடைத்துள்ளது.இந்த அரசுக்கு நிதி ஆதாரங்கள் குறிப்பிட்ட அளவே உள்ளது. குறிப்பாக, ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்திய பிறகு, நிதி ஆதாரம் அரசுக்கு பெரும் சவாலாகவே உள்ளது.தவிர்க்க முடியாத செலவினங்களை, கிடைக்கும் வருவாய்க்கு ஏற்றவாறு மேற்கொள்ள வேண்டிய நிலையில் அரசு உள்ளது.புதுச்சேரி மக்களின் விருப்பங்களை கருத்தில் கொண்டு, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் திருப்திபடுத்தும் வகையில், வருவாயை பெருக்கிட சிறப்பான பட்ஜெட்டை முதல்வர் சமர்ப்பிப்பார் என நான் நம்புகிறேன்.மேலும், மன்ற உறுப்பினர்கள், முதல்வரின் திறமையான வழிகாட்டுதலின்படி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற கடுமையாக பாடுபடுவீர்கள்.எதிர்வரும் காலங்களில் வறுமை மற்றும் வேலையின்மை இல்லாத, வளமிக்க பதுச்சேரி மாநிலத்தை உருவாக்குவீர்கள் என நம்புகிறேன்.இந்த அரசு, கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதில், பெருமளவில் வெற்றியும் கண்டுள்ளது.மக்கள் மற்றும் அரசு இயந்திரத்தின் ஒத்துழைப்புடன் புதுச்சேரி விரைவில் கொரோனா தொற்றில் இருந்த விடுபடும் என நம்புகிறேன்.இந்த சீரிய முயற்சியில் இந்த அரசு புதிய உச்சத்தை அடைய, உங்களின் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்.இவ்வாறு கவர்னர் தமிழிசை தனது உரையில் குறிப்பிட்டார்.

முதல்முறையாக தமிழில் உரைபுதுச்சேரி சட்டசபையில், வழக்கமாக பட்ஜெட் கூட்டத் தொடரை கவர்னர் துவக்கி வைத்து பேசுவார். தமிழ் மொழி பேசத் தெரியாத கவர்னர், ஆங்கிலத்தில் உரையாற்றுவார். அதனை, தமிழில் மொழி பெயர்த்து சபாநாயகர் வாசிப்பார்.நேற்று, 15வது சட்டசபையின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரை துவக்கி வைத்த கவர்னர் தமிழிசை, தனது உரையை நேரடியாக தமிழில் வாசித்தார். புதுச்சேரி சட்டசபை வரலாற்றில் தமிழில், கவர்னர் உரையாற்றியது இதுவே முதல் முறையாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X