தமிழ்நாடு

மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு சுதந்திர போராட்ட தியாகி பெயர்; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு சுதந்திர போராட்ட தியாகி என்.எம்.ஆர்.சுப்பராமன் பெயரை சூட்டக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரையில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் என்.எம்.ஆர்.சுப்பராமன். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறை சென்றவர். மகாத்மா காந்தியின் கொள்கையை

மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு சுதந்திர போராட்ட தியாகி என்.எம்.ஆர்.சுப்பராமன் பெயரை சூட்டக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரையில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் என்.எம்.ஆர்.சுப்பராமன். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறை சென்றவர். மகாத்மா காந்தியின் கொள்கையை பின்பற்றியவர்.எம்.எல்.ஏ.,-எம்.பி.,யாக பதவி வகித்தார். மதுரை நகராட்சித் தலைவராக இருந்தபோது பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்தினார். அவனியாபுரத்தில் கால்நடை தீவனப் பண்ணையை உருவாக்கினார்.

வினோபா பவே பூமிதான இயக்கம் நடத்தியபோது 100 ஏக்கர் நிலத்தை சுப்பராமன் தானமாக வழங்கினார். மதுரையில் சொந்த செலவில் இலவச மருத்துவமனை துவக்கினார்.மதுரையின் வளர்ச்சிக்கு சுப்பராமன் பங்களிப்பு செய்துள்ளார். அவரை மதுரை காந்தி என அழைக்கின்றனர். மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு 'மதுரை காந்தி' என்.எம்.ஆர்.சுப்பராமன் பெயர் சூட்ட வேண்டும். அவரது சிலையை ரயில்வே ஸ்டேஷன் முன் நிறுவ மத்திய ரயில்வேத்துறை பரிசீலிக்க உத்தரவிட உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன்.

ஜனவரியில் நீதிபதிகள் அமர்வு,'இந்நீதிமன்றம் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க இயலாது. மனுவை ரயில்வேத்துறை செயலாளர் பரிசீலித்து தகுந்த முடிவெடுப்பார் என இந்நீதிமன்றம் எதிர்பார்க்கிறது,' என உத்தரவிட்டு பைசல் செய்தது.

மனுவை ரயில்வேத்துறை செயலாளர் நிராகரித்தார்.சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு எம்.ஜி.ஆர்.,பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுப்பராமனின் தியாகத்தை கருத்தில் கொள்ளாமல் ரயில்வேத்துறை செயலாளர் நிராகரித்துள்ளார். அதை ரத்து செய்து மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு என்.எம்.ஆர்.சுப்பராமன் பெயரை சூட்ட உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரமேஷ் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர், ரயில்வேத்துறை செயலாளர், தமிழக தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி அக்.,21 க்கு ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X