நாஜிம் நினைப்பது ஒருபோதும் நடக்காது: சபாநாயகர் செல்வம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

நாஜிம் நினைப்பது ஒருபோதும் நடக்காது: சபாநாயகர் செல்வம்

Added : ஆக 27, 2021
Share
புதுச்சேரி-துணை சபாநாயகர் பதவியேற்பு நிகழ்ச்சியில், தி.மு.க., எம்.எல்.ஏ., நாஜிம், சபாநாயகர் செல்வம் ஆகியோரது விவாதத்தால் சபையில் கலகலப்பு நிலவியது.சட்டசபையில் புதிதாக பதவியேற்ற துணை சபாநாயகரை முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்திப் பேசினர்.துணை சபாநாயகரை வாழ்த்திப் பேச தி.மு.க., எம்.எல்.ஏ., நாஜிமை, சபாநாயகர் செல்வம் அழைத்தார். அப்போது நடைபெற்ற

புதுச்சேரி-துணை சபாநாயகர் பதவியேற்பு நிகழ்ச்சியில், தி.மு.க., எம்.எல்.ஏ., நாஜிம், சபாநாயகர் செல்வம் ஆகியோரது விவாதத்தால் சபையில் கலகலப்பு நிலவியது.சட்டசபையில் புதிதாக பதவியேற்ற துணை சபாநாயகரை முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்திப் பேசினர்.துணை சபாநாயகரை வாழ்த்திப் பேச தி.மு.க., எம்.எல்.ஏ., நாஜிமை, சபாநாயகர் செல்வம் அழைத்தார். அப்போது நடைபெற்ற விவாதம்:நாஜிம்: கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசசபைக்கு மீண்டும் வரும் வாய்ப்பை பெற்றுள்ளேன். இன்று காலை சபையை பார்த்தபோது ராகு, கேது இடம் பெயர்வதை போல, பலர் இடம் பெயர்ந்துள்ளதை பார்க்கிறேன்.என்னதான் ராகு, கேது இடம்பெயர்ந்தாலும், குருவின் பார்வை இருக்க வேண்டும் என எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.இதை நான் சொல்வதற்கு காரணம், ராஜவேலு பண்பாடு மிக்கவர் சக உறுப்பினர்களை மதிக்கக் கூடியவர். அவர் அமைச்சராக இருந்தபோது, எனது தொகுதியில் விழா என்றால், என் வீட்டிற்கு வந்து அவரது காரிலேயே என்னை அழைத்துச் செல்வார். இதை தற்போது வந்துள்ள சாய்சரவணன்குமார் போன்றோர் கற்றுக்கொள்ள வேண்டும்.முதல்வருக்கும் அந்த குணம் உண்டு. உறுப்பினருக்கு உரிய மரியாதை வழங்குவதில் அவருக்கு நிகர் அவர்தான். தற்போது கொஞ்சம் மாறியிருப்பதை போல் தெரிகிறது.சபாநாயகர் செல்வம்: தொகுதிக்கு அமைச்சர்கள் வரும்போது, நீங்கள்தான் வந்து அவர்களை வரவேற்று அழைத்துச் செல்ல வேண்டும். ஒரு அமைச்சர் செய்தார் என்பதற்காக அனைவரும் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது தவறான செயல்.நாஜிம்: நான் அப்படி எதிர்பார்க்கவில்லை. ஒரு அமைச்சர் என்பதை மறந்து, அவரது மனிதநேயத்தை சுட்டிக் காட்டுவதற்காக இதை சொல்கிறேன்.சபாநாயகர்: அமைச்சர் வந்து உங்களை அழைத்து செல்வது என்பது முறையாக இருக்காது என்பது எனது கருத்து.நாஜிம்: அது உங்களுடைய கருத்து. ஆனால் அது அவருடைய பழக்கம். அது நல்ல பழக்கம்.சபாநாயகர்: நல்ல பழக்கமாக இருந்தாலும், ஒரு அமைச்சரை எம்.எல்.ஏ., தான் வந்து அழைத்துச் செல்ல வேண்டும்.நாஜிம்: துணை சபாநாயகர் என்பது தற்காலிகம் தான். கவலைப் படாதீர்கள். மீண்டும் சுழற்சி முறையில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அந்த சுழற்சி விரைவில் வரும் என நான் கருதுகிறேன்.சபாநாயகர்: நாஜிம் மனக் கணக்கு போட வேண் டாம். தேசிய ஜனநாயக கூட்டணி 5 ஆண்டு காலம் என்.ஆர். தலைமையில் நல்லாட்சியை கொடுக்கும்.நாஜிம்: இருக்கக் கூடாது என்ற அர்த்தத்தில் நான் கூறவில்லை. நுணலும்தன் வாயால் கெடும் என்பார்களே அதை போல் தெரிகிறது.சபாநாயகர்: மக்கள் முதல் வர் என்.ஆர். தலைமையில் 5 ஆண்டுகள் இந்த ஆட்சி சிறப்பாக நடைபெறும்.நாஜிம்: தலைமையை பொறுத்தவரை மாற்றமில்லை. தலைமை அப்படியேதான் இருக்கும்.சபாநாயகர்: நீங்கள் நினைப்பது 5 ஆண்டு காலத் தில் நடக்காது என்பதை நாங்களும் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் நினைக்கும் எந்த காரியமும் இந்த சட்டசபையில் நடக்காது.நாஜிம்: எங்களை பொறுத் தவரை முதல்வர் இருக்காலம், பேரவை தலைவரும் இருக்கலாம் ஒன்றும் தவறில்லை. ஏன் இதற்கு முன்உதாரணம் உண்டு டி.ஆர்., இருந்திருகின்றார்.சபாநாயகர்: நாஜிம் வீண் கணக்கு போட்டுக் கொண்டிருக்கின்றார். அவர் என்ன கணக்கு போட்டாலும் நடக்காது.நாஜிம்: அரசியலே கணக்கு தான். வேடிக்கையை பாருங்கள் என சொல்கிறோம்.சபாநாயகர்: நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள். தாங்கள் எங்கே இருக்கப் போகிறீர்கள் என சிறிது காலத்திற்குப் பிறகு எங்களுக்கும் தெரியும்.நாஜிம்: எங்கு இருப்போம் என நீங்களே சொல்லி விடுங்கள். ஜோதிடர் போல் கணிக்கிறீர்கள். அடுத்த இடம் எங்கே என நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.சபாநாயகர்: கண்டிப்பாக சொல்வோம்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X