எஸ்.எல்.சி.எஸ்., நடத்திய வாகை சூட வாரீர் போட்டி; மாணவிகளுக்கு கேடயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.எல்.சி.எஸ்., நடத்திய 'வாகை சூட வாரீர்' போட்டி; மாணவிகளுக்கு கேடயம்

Added : ஆக 27, 2021
Share
மதுரை : மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,) மற்றும் தினமலர் இணைந்து நடத்திய 'வாகை சூட வாரீர் -2021' போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்கபரிசு ,கேடயம் வழங்கப்பட்டது.மாநில அளவில் பிளஸ் 1 , பிளஸ் 2 மாணவர்களுக்கு இணையவழியில் ஓவியம், சமையல், போட்டோகிராபி, ஸ்மார்ட் சிட்டி மாதிரி, பண மேலாண்மை, பிளாக் கிரியேஷன்ஸ் ஆகிய 6 பிரிவுகளில் போட்டிகள்
 எஸ்.எல்.சி.எஸ்., நடத்திய 'வாகை சூட வாரீர்' போட்டி; மாணவிகளுக்கு கேடயம்

மதுரை : மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,) மற்றும் தினமலர் இணைந்து நடத்திய 'வாகை சூட வாரீர் -2021' போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்கபரிசு ,கேடயம் வழங்கப்பட்டது.

மாநில அளவில் பிளஸ் 1 , பிளஸ் 2 மாணவர்களுக்கு இணையவழியில் ஓவியம், சமையல், போட்டோகிராபி, ஸ்மார்ட் சிட்டி மாதிரி, பண மேலாண்மை, பிளாக் கிரியேஷன்ஸ் ஆகிய 6 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 30 மாவட்டங்களில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.இதில் ஒவ்வொரு போட்டியிலும் தலா 7பேர் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை செயின்ட் ஜோசப் பள்ளி மாணவிகள் 13 பேர் வெற்றி பெற்று ஒட்டுமொத்த 'சாம்பியன்' பட்டம் வென்றனர்.

அப்பள்ளியில் நடந்த பரிசளிப்பு விழாவில் எஸ்.எல்.சி.எஸ்., பி.ஆர்.ஓ., அம்மு பிரியதர்ஷினி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.பள்ளி தாளாளர் எஸ்தர் மேரி, முதல்வர் சகாய மேரி, துணை முதல்வர் சகாய பிரபா பங்கேற்றனர். பிற மாவட்டங்களை சேர்ந்த வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசு அவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X