பொது செய்தி

இந்தியா

பால் உற்பத்தி 1.75 லட்சம் லிட்டராக உயரும்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
புதுச்சேரி-'புதுச்சேரி மாநிலத்தில் பால் உற்பத்தியை 1,75,600 லிட்டராக உயர்த்த பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்படும்' என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.பட்ஜெட் உரையில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:ஆர்வமுள்ள பொது, அட்டவணை பிரிவு பயனாளிகளுக்கு முறையே 25 மற்றும் 33 சதவீதம் மானியத்தில் 4,000 கறவைப் பசுக்கள் வழங்கப்படும். கால்நடைகளின் இனப்பெருக்கம், பால் உற்பத்தியை அதிகரிக்க,

புதுச்சேரி-'புதுச்சேரி மாநிலத்தில் பால் உற்பத்தியை 1,75,600 லிட்டராக உயர்த்த பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்படும்' என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.பட்ஜெட் உரையில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:ஆர்வமுள்ள பொது, அட்டவணை பிரிவு பயனாளிகளுக்கு முறையே 25 மற்றும் 33 சதவீதம் மானியத்தில் 4,000 கறவைப் பசுக்கள் வழங்கப்படும். கால்நடைகளின் இனப்பெருக்கம், பால் உற்பத்தியை அதிகரிக்க, தாது உப்புக் கலவை அனைத்து கறவைப் பசுக்களுக்கும் வழங்கப்படும்.காமதேனு பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு 12 லிட்டர், அதற்குமேல் பால் தரக்கூடிய உயர் ரக கறவைப் பசுக்கள் மூலம், உயர்ரக கிடேரிக் கன்றுகள் உருவாக்கப்படும்.பால் உற்பத்தியைக் கணிசமான அளவில் அதிகரிக்க, பெண் கன்றுகளை மட்டுமே உருவாக்கும் பொருட்டு இனம் பிரிக்கப்பட்ட தொழில் நுட்பம் அறிமுகம் செய்யப்படும்.ஆர்வமுள்ள கால்நடை விவசாயிகளுக்கு, வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழிப் பண்ணை அமைக்க, இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். வங்கி, நபார்டு மூலம் கடனுதவி பெற ஏற்பாடு செய்யப்படும்.நடமாடும் கால்நடை மருந்தகங்களை செயல்படுத்த புதுச்சேரிக்கு இரண்டு, காரைக்காலுக்கு ஒன்று என மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்படும். இதன் மூலம் புதுச்சேரியில் பால் உற்பத்தி, தற்போதுள்ள 1,22,000 லிட்டரில் இருந்து 1,75,600 லிட்டராக உயரும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X