பொது செய்தி

இந்தியா

75 சதவீத மானியத்தில் கால்நடை தீவனம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
பட்ஜெட் உரையில் முதல்வர் ரங்கசாமி கூறியிருப்பதாவது:கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறைக்கு ரூ.44.88 கோடி நடப்பாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது.உள்ளூர் ஆடுகளை மேம்படுத்தி உற்பத்தியைப் பெருக்க, செயற்கை கருவூட்டல் செய்வதற்காக, சிறந்த மலபார் ஆடுகளின் விந்து, கால்நடைக் கிளை நிலையங்களுக்கு வழங்கப்படும்.புறக்கடைக் கோழி வளர்ப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு, இருவித

பட்ஜெட் உரையில் முதல்வர் ரங்கசாமி கூறியிருப்பதாவது:கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறைக்கு ரூ.44.88 கோடி நடப்பாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது.உள்ளூர் ஆடுகளை மேம்படுத்தி உற்பத்தியைப் பெருக்க, செயற்கை கருவூட்டல் செய்வதற்காக, சிறந்த மலபார் ஆடுகளின் விந்து, கால்நடைக் கிளை நிலையங்களுக்கு வழங்கப்படும்.புறக்கடைக் கோழி வளர்ப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு, இருவித பயன்பாடுகள் கொண்ட 1,000 கிரிராஜா கோழிகள், 50 சதவீத மானியத்தில் விவ சாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும்.கறவை மாடுகள், கலப்பினக் கன்றுகளை பராமரிப்பு செலவை குறைக்கவும், பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களில் உறுப்பினர் அல்லாத விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் கால்நடைத் தீவனம் வழங்கும் திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்படும்.அடுத்த தலைமுறை கறவைப் பசுக்களை உருவாக்க, கலப்பின கன்றுகளுக்கு 75 சதவீத மானிய விலையில் சமச்சீர் கலவை கன்று தீவனம் வழங்க உத்தேசிக்கப் பட்டுள்ளது.கறவை பசுக்கள் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க சிறந்த மரபணுக்கள் கொண்ட கலப்பின கிடேரி கன்றுகளை உருவாக்க, 70 ஆயிரம் செயற்கை முறை கருவூட்டல்கள் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 ஆயிரம் சிறந்த மரபணுக்கள் கொண்ட கன்றுகளை 2021-22ம் ஆண்டில் பெற இயலும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X