சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் அள்ளும் இயந்திரம் சிறைபிடிப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திருமங்கலம் : திருமங்கலம் கப்பலுார் டோல்கேட் நிர்வாக அலுவலகம் மற்றும் ஊழியர் ஓய்வு அறை தற்காலிக கட்டடத்தில் செயல்பட்டது.தற்போது நிரந்தர கட்டடம் கட்டப்படுகிறது. இதற்காக கப்பலுார் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஓடைப்பாதையில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட மரங்களை டோல்கேட் நிர்வாகத்தினர் மணல் அள்ளும் இயந்திரம் உதவியுடன் அகற்றினர். கட்டடம் கட்ட ஊராட்சி

திருமங்கலம் : திருமங்கலம் கப்பலுார் டோல்கேட் நிர்வாக அலுவலகம் மற்றும் ஊழியர் ஓய்வு அறை தற்காலிக கட்டடத்தில் செயல்பட்டது.

தற்போது நிரந்தர கட்டடம் கட்டப்படுகிறது. இதற்காக கப்பலுார் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஓடைப்பாதையில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட மரங்களை டோல்கேட் நிர்வாகத்தினர் மணல் அள்ளும் இயந்திரம் உதவியுடன் அகற்றினர். கட்டடம் கட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை.இதனால் ஊராட்சி தலைவர் கண்ணன் மற்றும் கிராமத்தினர் டோல்கேட் நிர்வாகிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மணல் அள்ளும் இயந்திரத்தையும் சிறைபிடித்தனர். போலீசார் அவர்களுடன் பேசினர்.கட்டுமானம் மற்றும் மரம் வெட்டும் பணியை நிறுத்தஉத்தரவிட்ட போலீசார், உரிய ஆவணங்களை காட்டிய பின்னர் பணியை தொடர அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X