பொது செய்தி

இந்தியா

ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
பட்ஜெட் உரையில், பள்ளி கல்வித் துறை திட்டங்கள் குறித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:புதுச்சேரியை நுாறு சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாற்றுவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள இலவச பாடபுத்தகம், நோட்டு புத்தகங்கள். சீருடை, சிற்றுண்டி, மதிய உணவு, ஒரு ரூபாய் பஸ் வசதி, கல்வி உதவித்தொகை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.இந்த கல்வியாண்டில் ஐந்து

பட்ஜெட் உரையில், பள்ளி கல்வித் துறை திட்டங்கள் குறித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:புதுச்சேரியை நுாறு சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாற்றுவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள இலவச பாடபுத்தகம், நோட்டு புத்தகங்கள். சீருடை, சிற்றுண்டி, மதிய உணவு, ஒரு ரூபாய் பஸ் வசதி, கல்வி உதவித்தொகை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.இந்த கல்வியாண்டில் ஐந்து பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.பள்ளிகளில் சுகாதாரமான கழிப்பறைகள், நல்ல குடிநீர் வசதிகளை மேம்படுத்தி, பள்ளி கட்டங்களை சிறந்த முறையில் பராமரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் பொருட்டு, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் படிக்கும் மற்றும் எண்ணறிவு திறனை மேம்படுத்த, மத்திய அரசு திட்டத்தின் வழிகாட்டுதலில், எண்ணறிவு பற்றிய அடிப்படை கல்வியறிவு திட்டத்தை நடைமுறைப் படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.இந்த நிதியாண்டில் 2.40 கோடி ரூபாய் செலவில் 100 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் நிறுவப்பட உள்ளன. ரூ.51.57 லட்சம் செலவில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தற்காப்பு பயிற்சி அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.தகவல் மற்றும் மின்னணு தொழில்நுட்பங்களின் மூலம் பள்ளிகளை மேம்படுத்த 1.10 கோடி ரூபாய் செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X