விநாயகர் சிலைகளை எடுத்து சென்ற போலீசார்; பா.ஜ., இந்து முன்னணியினர் எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சிலைகளை எடுத்து சென்ற போலீசார்; பா.ஜ., இந்து முன்னணியினர் எதிர்ப்பு

Added : ஆக 27, 2021
Share
திருமங்கலம் : திருமங்கலத்தில் செய்து வைத்திருந்த விநாயகர் சிலைகளை போலீசார் எடுத்து சென்றதற்கு பா.ஜ., இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.திருமங்கலம் ராஜாராம் தெருவில் விநாயகர் சதுர்த்திக்காக அரை அடி முதல் 7 அடி வரையிலான விநாயகர் சிலைகளை வட மாநில தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடத நிலையில் சிலைகள்

திருமங்கலம் : திருமங்கலத்தில் செய்து வைத்திருந்த விநாயகர் சிலைகளை போலீசார் எடுத்து சென்றதற்கு பா.ஜ., இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருமங்கலம் ராஜாராம் தெருவில் விநாயகர் சதுர்த்திக்காக அரை அடி முதல் 7 அடி வரையிலான விநாயகர் சிலைகளை வட மாநில தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடத நிலையில் சிலைகள் விற்பனை நடைபெறவில்லை. அப்போது தயார் செய்த சிலைகள் அந்த இடத்திலேயே பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

செப். 10 ல் விநாயகர் சதுர்த்தி வரவுள்ள நிலையில், பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 9 சிலைகளை போலீசார் எடுத்து சென்று போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமங்கலம் பா.ஜ., மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் டி.எஸ்.பி., வினோதினியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சிலை செய்யும் இடத்தில் இருந்த மற்ற சிலைகளை போலீசார் அதே இடத்தில் வைத்து பாதுகாப்புக்கு போலீசை நிறுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X