பொது செய்தி

இந்தியா

தொற்று நோய் சிகிச்சைக்கு புதிய மருத்துவமனை

Added : ஆக 27, 2021
Share
Advertisement
புதுச்சேரி-சட்டசபையில், நேற்று பட்ஜெட் தாக்கல் செய்து, முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் எனது நன்றி. அரசு இயந்திரம் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணியில் அயராது உழைத்து வருகிறது. முன்கள பணியாளர்களின் தன்னலமற்ற சேவையால் கணிசமான வெற்றி அடைந்துள்ளோம்.புதுச்சேரியின் 4 பிராந்திய மக்களுக்கும் சிறந்த சிகிச்சை அளிக்க,

புதுச்சேரி-சட்டசபையில், நேற்று பட்ஜெட் தாக்கல் செய்து, முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் எனது நன்றி. அரசு இயந்திரம் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணியில் அயராது உழைத்து வருகிறது. முன்கள பணியாளர்களின் தன்னலமற்ற சேவையால் கணிசமான வெற்றி அடைந்துள்ளோம்.புதுச்சேரியின் 4 பிராந்திய மக்களுக்கும் சிறந்த சிகிச்சை அளிக்க, அனைவருக்குமான முழு சுகாதார பாதுகாப்பு திட்டத்தை உருவாக்க உத்தேசிக்கப் பட்டுள்ளது. மருத்துவ கல்லுாரி, பல் மருத்துவ கல்லுாரி, இதர மருத்துவ நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் தேவைக்கேற்ப நிரப்பப்படும்.கோரிமேடு பகுதியில் பல்வேறு தொற்று நோய் சிகிச்சைகளுக்காக, 500 படுக்கைகளுடன் கூடிய புதிய மருத்துவமனை அமைக்கப்படும்.காரைக்கால் மருத்துவமனையில் ரூ. 50 லட்சம் செலவில் வெளிப்புற சிகிச்சை பிரிவு, பதிவு மையம் அமைக்கப்படும். மாகி பள்ளூரில் ரூ. 50 லட்சம் செலவில் புதிய சமுதாய சுகாதார மையம் கட்டப்படும். கொரோனா சிகிச்சைக்காக, கூடுதலாக ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வில்லியனுார், ஏனாமில் புதிதாக கட்டப்படும் ஆயுஷ் மருத்துவமனைகளின் கட்டுமானம் முடிந்து, இந்தாண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். நடப்பு நிதியாண்டில் சுகாதாரத்துறைக்கு ரூ. 795.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X