பொது செய்தி

இந்தியா

'பாட்கோ'வில் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி

Added : ஆக 27, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பட்ஜெட் தாக்கலின்போது ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலம் குறித்த திட்டங்களை அறிவித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:ஆதிதிராவிடர் மணப்பெண்ணின் பெற்றோருக்கு தற்போது வழங்கப்படும் திருமண நிதி உதவி ரூ.75,000லிருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.வில்லியனூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கிளை அலுவலகம் ஒன்றை அமைக்க அரசு

புதுச்சேரி-பட்ஜெட் தாக்கலின்போது ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலம் குறித்த திட்டங்களை அறிவித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:ஆதிதிராவிடர் மணப்பெண்ணின் பெற்றோருக்கு தற்போது வழங்கப்படும் திருமண நிதி உதவி ரூ.75,000லிருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.வில்லியனூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கிளை அலுவலகம் ஒன்றை அமைக்க அரசு உத்தேசித்துள்ளது. நடப்பாண்டில் பழங்குடியின மாணவர்களுக்காக தங்கும் விடுதி ஒன்றை அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி கற்கும் வகையில், கல்லுாரி படிப்புகள் அனைத்திற்கும் இலவச கல்வி வழங்கும் திட்டம் நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்படும்.'பாட்கோ' மூலம் கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் திருப்பி செலுத்த வேண்டிய கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்தாண்டு சிறப்புக்கூறு திட்ட நிதியாக 396 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், ஆதிதிராவிடர் நலத்துறைக்காக 165.44 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X