பொது செய்தி

இந்தியா

முத்தியால்பேட்டையில் 300 பேருக்கு உதவித்தொகை ஆணை வழங்கல்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
புதுச்சேரி--முத்தியால்பேட்டையில் 300 பயனாளிகளுக்கு, அரசின் மாத உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.முத்தியால்பேட்டை தொகுதியில் வசிக்கும் முதியோர், விதவை, முதிர்கன்னியர், கணவரால் கைவிடப்பட்டோர் அரசின் மாதாந்திர உதவித்தொகை கேட்டு கடந்த ஆட்சியில் விண்ணப்பித்தனர்.இந்த விண்ணப்பங்கள் கிடப்பில் இருப்பது குறித்து தொகுதி எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார், முதல்வர் ரங்கசாமியின்

புதுச்சேரி--முத்தியால்பேட்டையில் 300 பயனாளிகளுக்கு, அரசின் மாத உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.முத்தியால்பேட்டை தொகுதியில் வசிக்கும் முதியோர், விதவை, முதிர்கன்னியர், கணவரால் கைவிடப்பட்டோர் அரசின் மாதாந்திர உதவித்தொகை கேட்டு கடந்த ஆட்சியில் விண்ணப்பித்தனர்.இந்த விண்ணப்பங்கள் கிடப்பில் இருப்பது குறித்து தொகுதி எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார், முதல்வர் ரங்கசாமியின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதையடுத்து, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டன. தேர்வு செய்யப்பட்ட 300 பயனாளிகளுக்கு, உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.முத்தியால்பேட்டை அம்பாள் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை, பயனாளிகளுக்கு எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X