உள்ளாட்சி இயக்குனருக்கு மிரட்டல் வி.சி., நிர்வாகிகள் மீது வழக்கு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
புதுச்சேரி-உள்ளாட்சித் துறை இயக்குனர் அலுவலகத்தில் புகுந்து, இயக்குனருக்கு மிரட்டல் விடுத்த வி.சி., கட்சி நிர்வாகிகள் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில், உள்ளாட்சித் துறை அலுவலகம் உள்ளது. இத்துறையின் இயக்குனர் ரவிதீப் சிங் சாகர், கடந்த 24ம் தேதி காலை 11.௦௦ மணியளவில், அலுவலகத்தில் இருந்தார்.அப்போது, வி.சி., கட்சி நிர்வாகி

புதுச்சேரி-உள்ளாட்சித் துறை இயக்குனர் அலுவலகத்தில் புகுந்து, இயக்குனருக்கு மிரட்டல் விடுத்த வி.சி., கட்சி நிர்வாகிகள் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில், உள்ளாட்சித் துறை அலுவலகம் உள்ளது. இத்துறையின் இயக்குனர் ரவிதீப் சிங் சாகர், கடந்த 24ம் தேதி காலை 11.௦௦ மணியளவில், அலுவலகத்தில் இருந்தார்.அப்போது, வி.சி., கட்சி நிர்வாகி பாவாணன் உள்ளிட்ட 5 பேர் வந்தனர்.இயக்குனர் ரவிதீப் சிங் சாகரிடம், சிறையில் விசாரணை கைதி ஜெயமூர்த்தி இறந்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை கண்காணிப்பாளர், டாக்டரை விசாரணை முடியும் வரை ஏன் வேறு இடத்திற்கு மாற்றவில்லை என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து உள்ளாட்சி துறை இயக்குர் ரவிதீப் சிங் சகார், பெரியக்கடை போலீசில் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார். அதில், தன்னை பணி செய்ய விடாமல், மிரட்டல் விடுத்ததாக கூறி உள்ளார்.அதன் பேரில் வி.சி., துணை பொதுச் செயலாளர் பாவாணன், தீந்தமிழன், ஆற்றலரசு உள்பட 5 பேர் மீது பெரியக்கடை போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X