பொது செய்தி

இந்தியா

இத்துடன் முடிவடைந்தன 'யாகூ' செய்தி சேவைகள்

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: பிரபல 'யாகூ' நிறுவனம், இந்தியாவில், அதன் செய்தி இணையதள சேவையை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.புதிய அன்னிய நேரடி முதலீட்டு விதியின் கீழ், இந்தியாவில், 'டிஜிட்டல்' ஊடக நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு முதலீட்டு வரம்பை குறைத்ததை அடுத்து, யாகூ நிறுவனம் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, 'யாகூ செய்திகள், யாகூ
Yahoo news sites, shut down, India

புதுடில்லி: பிரபல 'யாகூ' நிறுவனம், இந்தியாவில், அதன் செய்தி இணையதள சேவையை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.

புதிய அன்னிய நேரடி முதலீட்டு விதியின் கீழ், இந்தியாவில், 'டிஜிட்டல்' ஊடக நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு முதலீட்டு வரம்பை குறைத்ததை அடுத்து, யாகூ நிறுவனம் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, 'யாகூ செய்திகள், யாகூ கிரிக்கெட், நிதி, பொழுதுபோக்கு மேக்கர்ஸ் இந்தியா' ஆகிய சேவைகள் நிறுத்தப்படுகின்றன.


latest tamil news


இவற்றில் நேற்றிலிருந்து உள்ளடக்கங்கள் எதுவும் இடம்பெறாது. இருப்பினும், இதனால் யாகூ மின்னஞ்சலை பயன்படுத்துபவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும், அதன் சேவைகள் வழக்கம் போலவே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் நடைமுறைக்கு வரும் புதிய அன்னிய நேரடி விதிமுறைகளின்படி, இந்தியாவில் டிஜிட்டல் ஊடக நிறுவனங்களில், மத்திய அரசின் ஒப்புதலுக்கு உட்பட்டு, வெளிநாட்டு முதலீடுகள் 26 சதவீதம் வரை மட்டுமே இருக்கலாம். யாகூ நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக இத்தகைய சேவைகளை வழங்கி வந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
27-ஆக-202119:43:19 IST Report Abuse
spr "Promotions, SPAM" என்ற வகையில் விளம்பரங்களை அனுப்ப மெயில் ஒன்றே போதுமே மற்றவை அந்த நிறுவனத்திற்கு வேண்டாத ஒன்றல்லவா?
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
27-ஆக-202116:00:48 IST Report Abuse
DVRR நேத்து யாஹூ செய்தால் இதை சொன்னவுடன் எதற்கு என்று நினைத்தேன் இப்போது புரிச்சிருச்சி
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
27-ஆக-202115:40:15 IST Report Abuse
Vena Suna யாஹூ ,,யாகூ அல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X