பெண் கொலை வழக்கில்டிரைவரிடம் இருந்து நகை மற்றும் பைக் பறிமுதல்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
வில்லியனுார்--லேப் டெக்னீசியன் கொலை வழக்கில் கைதான டிரைவர் ரமேஷிடம் இருந்து நகை மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்வில்லியனுார் கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் பாலபாஸ்கர் மனைவி ஆரோக்கிய மேரி (31). தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார்.கடந்த 19ம் தேதி வேலைக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. 23ம் தேதி ஊசுட்டேரி பூத்துறை சாலையில்

வில்லியனுார்--லேப் டெக்னீசியன் கொலை வழக்கில் கைதான டிரைவர் ரமேஷிடம் இருந்து நகை மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்வில்லியனுார் கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் பாலபாஸ்கர் மனைவி ஆரோக்கிய மேரி (31). தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார்.கடந்த 19ம் தேதி வேலைக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. 23ம் தேதி ஊசுட்டேரி பூத்துறை சாலையில் ஆரோக்கியமேரி சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலை வழக்கில், அதே மருத்துவமனையில் டிரைவராக பணியாற்றி வரும் அரியூரை சேர்ந்த ரமேஷ்,31, என்பவர் கைது செய்யப்பட்டார்.சிறையில் இருந்த ரமேஷை, நேற்று போலீஸ் காவலில் எடுத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர் .விசாரணையில், பண நெருக்கடியில் இருந்த ரமேஷ், ஆரோக்கிய மேரி அணிந்திருந்த தங்க நகை மீது கண் வைத்தார். கடந்த 19ம் தேதி பணிமுடித்து சென்ற ஆரோக்கியமேரியிடம் ஸ்கூட்டரில் 'லிப்ட்' கேட்டு சென்றுள்ளார். கோர்க்காடு ஏரிக்கரை பகுதியில் சென்றபோது நகைக்காக கழுத்தை நெரித்து கொலை செய்து, அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டார். பின்னர் உடலை எரித்து சாக்குமூட்டையில் கட்டி பூத்துறை சாலையோர புதரில் வீசிவிட்டார் என தெரிய வந்தது.ஆரோக்கியமேரியிடம் பறித்த நகையை, 20ம் தேதி சண்முகாபுரத்தில் உள்ள வட்டிக்கடையில் ரூ.45 ஆயிரத்திற்கு அடகு வைத்தார். பயம் காரணமாக 21ம் தேதி நகையை மீட்டார். ஆரோக்கியமேரியின் சுசூகி ஆக்சஸ் ஸ்கூட்டர் மற்றும் நகையை, சண்முகாபுரத்தில் தனது மாமியார் வீட்டின் அருகே மறைத்து வைத்திருந்தார்.நகை மற்றும் ஸ்கூட்டரை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பிறகு, இரவு 8:30 மணியளவில் ரமேஷை காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X