பொது செய்தி

இந்தியா

ரூ.334.30 கோடி மதிப்பீட்டில் கட்டடக் கலைப் பள்ளி

Added : ஆக 27, 2021
Share
Advertisement
பட்ஜெட்டில், உயர்கல்வி, தொழில்நுட்ப கல்வி துறையின் திட்டங்கள் குறித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது;உயர் மற்றும் தொழில்நுட்ப கல்விக்காக 296.62 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காமராஜர் மாணவர் கல்வி நிதி உதவித் திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு நிதி உதவி தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக, 2021-22ல், ரூ. 40 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் 9,214

பட்ஜெட்டில், உயர்கல்வி, தொழில்நுட்ப கல்வி துறையின் திட்டங்கள் குறித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது;உயர் மற்றும் தொழில்நுட்ப கல்விக்காக 296.62 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காமராஜர் மாணவர் கல்வி நிதி உதவித் திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு நிதி உதவி தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக, 2021-22ல், ரூ. 40 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் 9,214 மாணவர்கள் பயன் பெறுவர்.ரூ. 334.30 கோடி மதிப்பீட்டில் தேசிய திட்டமிடுகை மற்றும் கட்டடக் கலைப் பள்ளி ஒன்றை புதுச்சேரி மாநிலத்தில் நிறுவ, மேம்பாட்டுத் திட்ட அறிக்கை, மத்திய மனிதவள துறை அமைச்சக ஒப்புதலுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.ஏனாமில் அரசு தொழில்நுட்பக் கல்லுாரி அமைப்பது உட்பட, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசின் உயர் கல்வி திட்டத்திற்கு மாநில பங்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, வேலை வாய்ப்புகளை உருவாக்க தொழில் நோக்குநிலை அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X