பொது செய்தி

இந்தியா

பெட்ரோல் விலை குறைப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் பெட்ரோல் மீதான வாட் வரி 3 சதவீதம் குறைக்கப்பட்டதால், விலை குறைப்பு இன்று காலை முதல் அமுலுக்கு வருகிறது.தமிழகத்தில், சமீபத்தில் பெட்ரோல் மீதான வாட் வரி ரூ. 3 குறைக்கப்பட்டது. இதனால், புதுச்சேரியை விட தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைந்தது.புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெட்ரோல் மீதான வாட் வரியை 3 சதவீதம் குறைக்க, அமைச்சரவையில் முடிவு செய்து,

புதுச்சேரி-புதுச்சேரியில் பெட்ரோல் மீதான வாட் வரி 3 சதவீதம் குறைக்கப்பட்டதால், விலை குறைப்பு இன்று காலை முதல் அமுலுக்கு வருகிறது.தமிழகத்தில், சமீபத்தில் பெட்ரோல் மீதான வாட் வரி ரூ. 3 குறைக்கப்பட்டது. இதனால், புதுச்சேரியை விட தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைந்தது.புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெட்ரோல் மீதான வாட் வரியை 3 சதவீதம் குறைக்க, அமைச்சரவையில் முடிவு செய்து, கவர்னர் ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது.பெட்ரோல் மீதான வரியை 3 சதவீதம் குறைக்க, கவர்னர் தமிழிசை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார்.அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 2.43 குறையும். புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.44 ஆகவும், காரைக்காலில் ரூ. 99.30 ஆக விற்பனை ஆகும் என கவர்னரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.பெட்ரோல் விலை குறைப்பிற்கான அரசாணை, நேற்று வெளியிடப்பட்டது. இன்று காலை முதல், விலை குறைப்பு அமலுக்கு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X