பொது செய்தி

இந்தியா

ரூ.1.67 கோடியில் பாகூரில் பால்கோவா உற்பத்தி ஆலை

Added : ஆக 27, 2021
Share
Advertisement
பட்ஜெட் தாக்கலின்போது, கூட்டுறவு நிறுவனங்கள் குறித்த திட்டங்களை விவரித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:.தீவிர நிதி பற்றாக்குறை இருக்கும்பட்சத்தில், கூட்டுறவு நிறுவனங்களுக்கு 10 சதவீத நிதியை உயர்த்தி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.பாகூரில், பாலின் மதிப்பு கூட்டப்பட்ட பொருளான பால்கோவாவை உற்பத்தி செய்ய, ஆலை ஒன்று 1.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க உத்தேசிக்கப்

பட்ஜெட் தாக்கலின்போது, கூட்டுறவு நிறுவனங்கள் குறித்த திட்டங்களை விவரித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:.தீவிர நிதி பற்றாக்குறை இருக்கும்பட்சத்தில், கூட்டுறவு நிறுவனங்களுக்கு 10 சதவீத நிதியை உயர்த்தி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.பாகூரில், பாலின் மதிப்பு கூட்டப்பட்ட பொருளான பால்கோவாவை உற்பத்தி செய்ய, ஆலை ஒன்று 1.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க உத்தேசிக்கப் பட்டுள்ளது.பாண்லே பால் பொருட்கள் தயாரிக்கும் பிரிவு 2.50 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படும்.புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, வேலை நாட்களுக்கான ஊதியம், தொழிலாளர் வைப்பு நிதி நிலுவை தொகைக்காக, ரூ.40 கோடியை அரசு இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஆலையை தொடர்ந்து நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்படும்.பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு மணல் விற்பனை செய்ய, மணமேடு கிராமத்தில் உள்ள மணல் குவாரியை பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X