பொது செய்தி

இந்தியா

ரூ. 20 கோடி மதிப்பீட்டில் பல அடுக்கு கார் பார்க்கிங்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பட்ஜெட் உரையில் முதல்வர் ரங்கசாமி கூறியிருப்பதாவது:ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், பிரதான வாய்க்கால்களில் நீர் தேங்கும் நிலையை தவிர்க்க, வீட்டுவசதி வாரியத்திற்கு எதிரே சிறிய பாலம் அமைத்தல். எல்லைப்பிள்ளைச்சாவடியில் மேட்டு வாய்காலுக்கான சிறுபாலம் அமைத்தல். காமராஜ் சாலை முதல் வாணரப்பேட்டை நடைபாலம் இடையே அமைந்துள்ள உப்பார் வாய்க்காலை இருபுறமும்

புதுச்சேரி-பட்ஜெட் உரையில் முதல்வர் ரங்கசாமி கூறியிருப்பதாவது:ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், பிரதான வாய்க்கால்களில் நீர் தேங்கும் நிலையை தவிர்க்க, வீட்டுவசதி வாரியத்திற்கு எதிரே சிறிய பாலம் அமைத்தல். எல்லைப்பிள்ளைச்சாவடியில் மேட்டு வாய்காலுக்கான சிறுபாலம் அமைத்தல். காமராஜ் சாலை முதல் வாணரப்பேட்டை நடைபாலம் இடையே அமைந்துள்ள உப்பார் வாய்க்காலை இருபுறமும் மேம்படுத்துதல். மேட்டு வாய்க்கால் குறுக்கே மூன்று சிறு பாலம் அமைத்தல் உள்ளிட்ட மழைநீர் வாய்க்கால் மேம்படுத்தும் பணிகள் ரூ. 26.42 கோடி செலவில் நடப்பாண்டில் செய்து முடிக்கப்படும்.பிரெஞ்சு கலாசாரத்தின் பாரம்பரியமாக திகழும் கலவைக் கல்லுாரி 4.39 கோடியிலும், வ.உ.சி மேல்நிலைப் பள்ளி 5.85 கோடியிலும், பென்ஷனேட் பள்ளி 5.51 கோடியிலும் பழமை மாறாமல் புனரமைக்கப்படும்.பழைய சிறை வளாகம், பழைய துறைமுகம் ஆகிய இடங்களில் 20 கோடி ரூபாயில் அடுக்கு கார் நிறுத்துமிடம் இந்தாண்டு துவங்கப்படும்.18 முதல் 40 வயது வரை உள்ள குறைந்த ஊதியம் பெறுபவர்கள், 60 வயது அடைந்தவுடன் மாதத்திற்கு 3000 ரூபாய் ஓய்வூதியம் பெறும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.'பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மந்தன் யோஜனா'என்ற இத்திட்டம், புதுச்சேரி கட்டட மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்களுக்கு விரிவுபடுத்தப்படும்.குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீட்டு திட்டம் கட்டுமான தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X