பொது செய்தி

தமிழ்நாடு

பைபாஸ் ரோட்டில் கண்காணிப்பு கேமராக்கள்; தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு பரிந்துரை

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கம்பம் : தேனி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பைபாஸ் ரோடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, தெருவிளக்குகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணைத்திற்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.திண்டுக்கல் முதல் குமுளி வரை 160 கி.மீ.,க்கு இருவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இதில் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. சின்னமனுார், உத்தமபாளையம், கம்பம்

கம்பம் : தேனி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பைபாஸ் ரோடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, தெருவிளக்குகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணைத்திற்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்

.திண்டுக்கல் முதல் குமுளி வரை 160 கி.மீ.,க்கு இருவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இதில் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. சின்னமனுார், உத்தமபாளையம், கம்பம் மற்றும் கூடலுாரில் பைபாஸ் பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளது. இந்த ரோடுகளை பொதுமக்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். அவற்றில் சமீபத்தில் விபத்துகள் அதிக எண்ணிக்கையில் நடந்துள்ளது.

இதையடுத்து பைபாசில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், தெருவிளக்குகள் அமைக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, மாவட்ட போலீஸ் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. பைபாஸ் ஆரம்பிக்கும் இடம், முடியும் இடம் மற்றும் ஆபத்தான, விபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் போலீசாரால் கண்டறியப்பட்டு பட்டியல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முழுமையாக முடிந்த பின்னர் கேமராக்கள் பொருத்த, தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X