பொது செய்தி

தமிழ்நாடு

படித்த இளைஞர்களை தொழில் முனைவோராக்க முயற்சி; மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தகவல்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
தேனி : ''படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கி தேனியை சுய தொழில்கள் நிறைந்த மாவட்டமாக மாற்றும் நடவடிக்கை எடுத்து வருவதாக,'' மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் எல்.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.தேனி விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் தொழிற்சாலைகள் இல்லை. படித்த இளைஞர்கள் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கு செல்கின்றனர். இந்நிலையை மாற்றிட சொந்த தொழில் துவங்கி

தேனி : ''படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கி தேனியை சுய தொழில்கள் நிறைந்த மாவட்டமாக மாற்றும் நடவடிக்கை எடுத்து வருவதாக,'' மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் எல்.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.

தேனி விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் தொழிற்சாலைகள் இல்லை. படித்த இளைஞர்கள் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கு செல்கின்றனர். இந்நிலையை மாற்றிட சொந்த தொழில் துவங்கி அதில் சாதிக்க ஆர்வம் உள்ளவர்களை தொழில் முனைவோர்களாவும், தொழில் நிறுவனங்களை மேம்படுத்திடும் பணியில் மாவட்ட தொழில் மையம் உள்ளது. இதன் செயல்பாடு குறித்து பொதுமேலாளர் கூறியதாவது:

மாவட்ட தொழில் மையத்தின் பணி என்ன...

படித்த இளைஞர்கள் சுயமாக தொழில் துவங்குவதற்கும், முதல் தலைமுறையினரை கண்டறித்து அவர்களை ஆற்றல் மிக்க தொழில் முனைவோராக உருவாக்க மாவட்ட தொழில் மையம் செயல்பட்டு வருகிறது. சுய தொழில் துவங்க விரும்புவோருக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சி, மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி செய்து தருகிறோம்.

தொழில் துவங்க என்னென்ன திட்டங்கள்....

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும் 'நீட்ஸ்' திட்டம் , பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் உள்ளன. 18 முதல் 35 வயது வரையும், சிறப்பு பிரிவினருக்கு 45 வயது வரை தொழில் துவங்கலாம். இதில் உற்பத்தி தொழில், சேவை தொழில், வியாபார தொழில்களுக்கு கடனுதவி வழங்கப்படும்.

இங்கு என்ன தொழில் களுக்கு வாய்ப்புள்ளது...

தாலுகா வாரியாக எந்தெந்த தொழில்களுக்கு வாய்ப்புள்ளது, ஏற்கனவே அப்பகுதியில் நடைபெற்று வரும் தொழில்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து 150க்கும் மேற்பட்ட தொழில்களை பட்டியலிட்டுள்ளோம். ஒரு தொழிலை தேர்வு செய்வு அதன் சந்தை வாய்ப்பை உருவாக்கினால் எல்லா தொழில்களும் வெற்றி பெறும். இங்கு வேளாண் உற்பத்தி பொருளை மதிப்பு கூட்டுதல், ஏற்றுமதி, உணவு பதப்படுத்துதல், ஆயத்த ஆடை தயாரித்தல், முருங்கை மதிப்பு கூட்டுதல் ஆகியவற்றில் அதிகமாக ஈடுபட்டுஉள்ளனர்.

தொழில் வளர்ச்சிக்கு தொழில் மையத்தின் பங்கு...

தொழில் ஆர்வமுள்ளவர்களுக்கு சுய தொழில் பயிற்சி அளிக்கவும், 193 வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிகாட்டுதல், ஆவணங்களை தயார் செய்து அளித்தல், ஒற்றை சாளர முறையில் தாமதம் இன்றி அனுமதி பெறவும், தடையில்லா சான்று, ஆவணங்கள் தயார் செய்து சமர்ப்பிக்க உதவுகிறோம்.

கடன், மானியம் தொகை அளவு என்ன....

தொழில்களுக்கு ஏற்ப குறைந்த பட்சம் ரூ. 5 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடன் வழங்க பரிந்துரை செய்கிறோம். பல்வேறு வகை மானியம் வழங்குகிறோம். ரூ.50 லட்சம் வரை மானியம் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் 150 முதல் 200 பேர் வங்கிகளில் கடன் பெற்று தொழில் முனைவோர் உருவாகின்றனர். 8 ம் வகுப்பு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் மானியம் கிடைக்கும்.

தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்கு என்ன திட்டம்...

தொழில் நடத்துபவர்கள் தரமான பொருளை உற்பத்தி செய்திடும் போது தரச்சான்று பெற்று வணிகம் செய்தால் அதன் மதிப்பும், வணிகமும் அதிகரிக்கும். இந்நிறுவனங்கள் ஐ.எஸ்.ஓ., ஐ.எஸ்.ஓ. 14001, ஐ.எஸ்.ஓ. 22000 உள்ளிட்ட 9 நிறுவனங்களின் தரச்சான்று பெற்று நகலை சமர்ப்பித்தால் அதற்கான செலவினை நுாறு சதவீதம் மாவட்ட தொழில் மையம் வழங்கும். மூலதன மானியம் 25 சதவீதம், 3 ஆண்டுகளுக்கு மின்சார மானியம் 25 சதவீதம், ஜெனரேட்டர் மானியம் 25 சதவீதம் வழங்குகிறோம். வட்டி மானியம் 3 சதவீதம், சிறு,குறு, நடுத்தர தொழில் உற்பத்தி நிறுவனங்கள் புதிய தொழில் நுட்பங்கள் மூலம் மின் ஆற்றல் சேமிக்க ஆற்றல் தணிக்கை மேற்கொள்ளும் நிறுவனங்களை ஊக்குவிக்கிறோம். இதற்கு ஒரு லட்சம் மானியம் வழங்குகிறோம்.

இந்த ஆண்டு எவ்வளவு மானியம் வழங்கப்படும்...

2021-2022 ம் ஆண்டிற்கு 426 பேருக்கு மானியம் வழங்க ரூ12.35 கோடி வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.தொழில் துவங்க விண்ணப்பித்து கடன்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X