ஆன்லைன் பணப்பட்டுவாடா முறை... அமலாகிறது| Dinamalar

தமிழ்நாடு

'ஆன்லைன்' பணப்பட்டுவாடா முறை... அமலாகிறது

Added : ஆக 27, 2021
Share
தேனி : தேனி ஆவினுக்கு பால் வழங்கும் 9 ஆயிரம் உற்பத்தியாளர்களுக்கு வங்கி கணக்கு 'ஆன்லைன்' மூலம் பணப்பட்டுவாடா செய்யும் புதிய திட்டம் அக்டோபரில் அமல்படுத்தப்பட உள்ளது. தேனி மாவட்டத்தில் விவசாயிகள் கறவை மாடு வளர்ப்பில் அதிகளவு ஈடுபட்டு பால் உற்பத்தி செய்கின்றனர். தேனி ஆவின் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் லிட்டரும், 7 தனியார் நிறுவனங்கள் 3 லட்சம் லிட்டர் பால்

தேனி : தேனி ஆவினுக்கு பால் வழங்கும் 9 ஆயிரம் உற்பத்தியாளர்களுக்கு வங்கி கணக்கு 'ஆன்லைன்' மூலம் பணப்பட்டுவாடா செய்யும் புதிய திட்டம் அக்டோபரில் அமல்படுத்தப்பட உள்ளது.

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் கறவை மாடு வளர்ப்பில் அதிகளவு ஈடுபட்டு பால் உற்பத்தி செய்கின்றனர். தேனி ஆவின் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் லிட்டரும், 7 தனியார் நிறுவனங்கள் 3 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கின்றன. மாவட்டத்தில் 490 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலம் 9 ஆயிரம் பேர் ஆவினுக்கு பால் வழங்குகின்றனர். தற்போது ஆவின் வழங்கும் பால் பணம் ,உற்பத்தியாளர்களுக்கு சங்கங்கள் மூலம் பணமாக வழங்கப்பட்டு வருகிறது.

அரசு உத்தரவு

பால் உற்பத்தியாளர்களுக்கு பட்டுவாடா வங்கி கணக்கு மூலம் 'ஆன்லைனில்' வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது பல்வேறு மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது. தேனியில் இல்லை. சங்கம் நேரிடையாக உற்பத்தியாளர்களுக்கு பட்டுவாடா செய்கிறது. 'ஆன்லைன் ' பண பரிவர்த்தனை திட்டத்தை கொண்டு வர தேனி பால்வள துணை பதிவாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தாலுகா வாரியாக சங்க தலைவர்கள் கூட்டம் நடத்தி நடைமுறைப்படுத்த வலியுறுத்துகின்றனர். தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

சிரமம்

சங்க தலைவர்கள் கூறுகையில், 'ஆவினில் 30 நாட்களுக்கு ஒருபட்டுவாடா செய்வதால் உற்பத்தியாளர்கள் பாதித்து தனியாருக்கு மாறுவார்கள். வங்கி நடைமுறையில் சிரமம் அடைவர். ஆவின் பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும் நாங்கள் சொந்த பணம் ஏற்பாடு செய்து பட்டுவாடா செய்கிறோம். முன்பணம் வழங்கி கொள்முதல் செய்கின்றனர். 'ஆன்லைன்' நடைமுறையால் உற்பத்தியாளர்களை பாதிக்கும். ஆவின் பால் கொள்முதலை மறைமுகமாக குறைக்கும், என்கின்றனர்.

கூட்டுறவு துறை அதிகாரி கூறுகையில், ' தேனி மாவட்டத்தில் அக்டோபர் முதல் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் 9 ஆயிரம் பேருக்கு வங்கி கணக்கு மூலம் ஆன்லைன் பட்டுவாடா செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X