பொது செய்தி

தமிழ்நாடு

கல்வராயன்மலையில் கலெக்டர் ஆய்வு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கச்சிராயபாளையம்-கல்வராயன்மலையில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.வெள்ளிமலையில் உள்ள ஏகலைவா பள்ளியில் நடைபெறும் புனரமைப்பு பணி, தோட்டக்கலைத் துறை சார்பில் கல்வராயன்மலையில் மேற்கொள்ளப்படும் மிளகாய் செடி வளர்த்தல் மற்றும் தேன் உற்பத்தி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.தொடர்ந்து, 4.25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய தாலுகா

கச்சிராயபாளையம்-கல்வராயன்மலையில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.வெள்ளிமலையில் உள்ள ஏகலைவா பள்ளியில் நடைபெறும் புனரமைப்பு பணி, தோட்டக்கலைத் துறை சார்பில் கல்வராயன்மலையில் மேற்கொள்ளப்படும் மிளகாய் செடி வளர்த்தல் மற்றும் தேன் உற்பத்தி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.தொடர்ந்து, 4.25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய தாலுகா அலுவலகம், கொட்டப்புத்துார் கிராமத்தில் தோண்டப்படும் திறந்தவெளி குடிநீர் கிணறு பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.பழங்குடியினர் நலத்துறை துணை கலெக்டர் பிரகாஷ்வேல், கல்வராயன்மலை தாசில்தார் இந்திரா, துணை தாசில்தார் மனோஜ் முனியன், பி.டி.ஓ., ஜெயராமன், பொறியாளர் அருண்ராஜா, தோட்டக்கலைத் துறை மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X