கிரைம் செய்திகள்...

Added : ஆக 27, 2021
Share
Advertisement
மகள் மாயம்: தாய் புகார்செஞ்சி: பெரியகரம் பகுதியைச் சேர்ந்தவர் கவுரி சங்கர். இவரது 18 வயது மகள் செஞ்சியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். இவரை கடந்த 22ம் தேதி முதல் காணவில்லை. அவரது தாய் சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.தாய் கண்டிப்பு: மகள் தற்கொலைசெஞ்சி: துடுப்பாக்கம் கிராமத்தைச்

மகள் மாயம்: தாய் புகார்செஞ்சி: பெரியகரம் பகுதியைச் சேர்ந்தவர் கவுரி சங்கர். இவரது 18 வயது மகள் செஞ்சியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். இவரை கடந்த 22ம் தேதி முதல் காணவில்லை. அவரது தாய் சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.தாய் கண்டிப்பு: மகள் தற்கொலைசெஞ்சி: துடுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகள் லைலா, 20; பிளஸ் 2 படித்து விட்டு தனது தந்தையுடன் விவசாய வேலை செய்து வந்தார். கடந்த 20ம் தேதி மாடுகளுக்கு தீவனம் வைக்கவில்லை என அவரது தாய் வளர்மதி கண்டித்தார்.இதனால் மனமுடைந்த லைலா வீட்டில் துாக்குப் போட்டுக் கொண்டார். உடன், அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார். செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.கணவர் மாயம்: மனைவி புகார்விழுப்புரம்: திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து, 56; இவர், விழுப்புரம் காதிகிராப்ட் அலுவலகத்தில், கடந்த 6 ஆண்டுகளாக தங்கி, அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 21ம் தேதி தனது மனைவி மேரிகிரேசியிடம் 3 நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு, வீட்டிற்கு வருவதாக கூறியவர் அங்கு செல்லவில்லை. அலுவலகத்திற்கும் வரவில்லை. மேரிகிரேசி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கூலித் தொழிலாளி தற்கொலைவானுார்: செங்கமேடு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 47; கூலித் தொழிலாளி. இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் அதே பகுதியில் புறம்போக்கு நிலத்தில் உள்ள வேப்பமரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.மின்சாரம் தாக்கி சிறுமி பலிதியாகதுருகம்: சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 49; விவசாயி. இவர், நேற்று தனது மகள் கீர்த்திகாவை,14; வயலுக்கு அழைத்துச் சென்றார். பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச கீர்த்திகாவிடம் மின் மோட்டாரின் சுவிட்சை போடச் சொன்னார். கீர்த்திகா சுவிட்சை போட்டபோது, மின்சாரம் தாக்கிய மயங்கி விழுந்தார். உடன், கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே கீர்த்திகா இறந்து விட்டதாக தெரிவித்தார். தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.வயிற்று வலி: பெண் தற்கொலைமயிலம்: அண்ணா நகரைச் சேர்ந்தவர் தயாளன். இவரது மகள் கீர்த்தனா, 25; இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று காலை மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், புடவையால் மின் விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தயாளன் அளித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.சிறுமி மாயம்: போலீஸ் விசாரணைவிழுப்புரம்: வளவனுார் அடுத்த எல்.ஆர்.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது 17 வயது மகளை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நாராயணசாமி அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.முன்விரோதம்: 14 பேர் மீது வழக்குதிண்டிவனம்: மேல்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை, 50; அதே பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. கடந்த 25ம் தேதி இரு தரப்பினரும் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பு புகார்களின் பேரில், அர்சுனன், சந்தோஷ், கோபால், வளையாபதி, கங்காதரன், ஏழுமலை, யுவராஜ், பரசுராமன், ராஜேஷ், லட்சுமிபதி உட்பட 14 பேர் மீது ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.தங்கை மாயம்: அண்ணன் புகார்விழுப்புரம்: காணை அடுத்த சிறுவாக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகள் பிரியங்கா, 23; எம்.எஸ்சி., பட்டதாரி. இவரை நேற்று முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பிரியங்காவின் அண்ணன் கதிரவன் அளித்த புகாரின் பேரில் காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X