பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா எதிர்ப்பு புரதம் கண்டறிய சர்வே

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கம்பம் : மக்களின் உடலில் கொரோனா நோய் எதிர்ப்பு புரதங்கள் (ஆண்டிபாடி) எந்த அளவிற்கு உள்ளது என்பதை கண்டறிய தேனி மாவட்டத்தில் ரத்தமாதிரி எடுத்து ரேண்டம் சர்வே செய்யும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.கொரோனா 2ம் அலை பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. எனினும் நோய் எதிர்ப்பு புரதங்கள் மக்கள் உடம்பில் எந்த அளவிற்கு உள்ளது என்பதை கண்டறிய இந்திய மருத்துவ

கம்பம் : மக்களின் உடலில் கொரோனா நோய் எதிர்ப்பு புரதங்கள் (ஆண்டிபாடி) எந்த அளவிற்கு உள்ளது என்பதை கண்டறிய தேனி மாவட்டத்தில் ரத்தமாதிரி எடுத்து ரேண்டம் சர்வே செய்யும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா 2ம் அலை பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. எனினும் நோய் எதிர்ப்பு புரதங்கள் மக்கள் உடம்பில் எந்த அளவிற்கு உள்ளது என்பதை கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் ( ஐ.சி.எம்.ஆர் ) முடிவுசெய்துள்ளது.

அதன்படி தேனி மாவட்டத்தில் சின்னமனுார் வட்டாரத்தில் இந்திரா நகர், ஆண்டிபட்டி வட்டாரத்தில் கோவில்பட்டி, உத்தமபாளையம் வட்டாரத்தில் கூடலுார் எல்லைத்தெரு, பெரியகுளம் வட்டாரத்தில் எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் முதற்கட்டமாக தலா 30 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது.

ரத்தத்திலிருந்து சீரம் பிரித்தெடுத்து நோய் எதிர்ப்பு புரதங்கள் கண்டறியப்படும். மாதிரிகள் டில்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'கொரோனா பாதித்தவர்கள், பாதிப்படையாதவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், செலுத்தாதவர்கள் என ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது.ஆய்வில் சராசரி நோய் எதிர்ப்பு புரதங்கள் இருப்பது கண்டறியப்படும். இதன் முடிவுகள் கொரோனா தடுப்பு ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X