பொது செய்தி

தமிழ்நாடு

வின்னர் மில்க் நேரடி பால் கொள்முதல் நிலையம்: தேவந்தவாடியில் திறப்பு விழா

Added : ஆக 27, 2021
Share
Advertisement
செஞ்சி-தேவந்தவாடியில் வின்னர் மில்க் நேரடி பால் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த தேவந்தவாடியில் சத்தியமங்கலம் வின்னர் மில்க் நிறுவனத்தின் நேரடி பால் கொள்முதல் நிலையம் திறப்பு விழா மற்றும் கறவை மாடு வளர்ப்புத் திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.மெட்ராஸ் தொண்டு நிறுவன இயக்குனர் இயேசுதாஸ் தலைமை

செஞ்சி-தேவந்தவாடியில் வின்னர் மில்க் நேரடி பால் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த தேவந்தவாடியில் சத்தியமங்கலம் வின்னர் மில்க் நிறுவனத்தின் நேரடி பால் கொள்முதல் நிலையம் திறப்பு விழா மற்றும் கறவை மாடு வளர்ப்புத் திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.மெட்ராஸ் தொண்டு நிறுவன இயக்குனர் இயேசுதாஸ் தலைமை தாங்கினார். முழு நிலவு மகளிர் பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அங்கம்மாள் வரவேற்றார்.எய்யில் ஸ்டேட் பாங்க் கிளை மேலாளர் அமர்நாத், பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கி மூலம் பால் பண்ணை அமைப்பதற்கும், தனி நபர்கள் கறவை மாடு வாங்குவதற்கும் வங்கியின் திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும், பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் கறவை மாடு கடன் வழங்கப்படும் என உறுதியளித்தார்.பெருவளூர் கால்நடை மருத்துவர் கலைச்செல்வி கறவை மாடு வளர்ப்பது, பால் உற்பத்தியை பெருக்குவது, நோய்களில் இருந்து கறவை மாடுகளைக் காப்பது குறித்து விளக்கினார்.வின்னர் மில்க் அலுவலர் சுரேஷ், பால் கொள்முதல் குறித்தும், உற்பத்தியாளர்களுக்கான பயன்கள் குறித்தும் பேசினார். மேலும், உற்பத்தியாகும் பால் முழுதும் வின்னர் மில்க் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் என உறுதியளித்தார். சங்க பொருளாளர் பிருந்தா மற்றும் உறுப்பினர்கள், வின்னர் மில்க் ஊழியர்கள் பங்கேற்றனர்.உற்பத்தியாளர் சங்க செயலாளர் தேன்மொழி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X