பொது செய்தி

தமிழ்நாடு

துப்புரவுப் பணியாளர்கள் நலன் குறித்து தேசிய ஆணைய குழுத் தலைவர் ஆய்வு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், துப்பரவு பணியாளர்கள் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, டில்லி, துப்புரவுப் பணியாளர் தேசிய ஆணைய குழுத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கி பேசுகையில், 'துப்புரவுப் பணியாளர்களுக்கான உடை, காலணி, ஊதியம், பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை அந்தந்த நகராட்சி கமிஷனர்கள், பி.டி.ஓ.,க்கள்,

விழுப்புரம்-விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், துப்பரவு பணியாளர்கள் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, டில்லி, துப்புரவுப் பணியாளர் தேசிய ஆணைய குழுத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கி பேசுகையில், 'துப்புரவுப் பணியாளர்களுக்கான உடை, காலணி, ஊதியம், பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை அந்தந்த நகராட்சி கமிஷனர்கள், பி.டி.ஓ.,க்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.துப்புரவுப் பணியாளர்கள் தங்களின் பணி தொடர்பாக தனிப்பட்ட சங்கம் சார்ந்த கோரிக்கைகளை இந்த கூட்டத்தில் தெரிவித்தால் அதன் மீது விரிவாக ஆய்வு செய்து, சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.தொடர்ந்து, துப்புரவுப் பணியாளர்கள் கோரிக்கை, சங்கம் சார்ந்த கோரிக்கை கேட்டறிந்து, சம்பந்தபட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.முன்னதாக, விழுப்புரம் சிலப்பதிகார தெருவில் துப்புரவு பணியாளர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் பயனுள்ளதாக உள்ளதா என்பது குறித்து நேரில் ஆய்வு செய்தார்.கலெக்டர் மோகன், ரவிக்குமார் எம்.பி., எஸ்.பி., ஸ்ரீநாதா, டி.ஆர்.ஓ., ராஜசேகரன், உதவி கலெக்டர் அமித், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரகுகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X