பொது செய்தி

தமிழ்நாடு

வானுார் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
வானுார்-வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது.வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கடந்தாண்டு முதல், தி.கூட்ரோட்டில் உள்ள காந்தி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தாண்டு, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது.இதில், என்.சி.சி., விளையாட்டு, முன்னாள் படை வீரர் குழந்தைகள்,

வானுார்-வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது.வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கடந்தாண்டு முதல், தி.கூட்ரோட்டில் உள்ள காந்தி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தாண்டு, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது.இதில், என்.சி.சி., விளையாட்டு, முன்னாள் படை வீரர் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் என சிறப்பு பிரிவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர்.வரும் 31ம் தேதி அனைத்து பாடப்பிரிவுகளுக்கும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த முடிவு செய்துள்ளதாக கல்லுாரி முதல்வர் வில்லியம் தெரிவித்தார்.நேற்று நடந்த கலந்தாய்வில், மாணவர்கள் சேர்க்கைக்குழு உறுப்பினர்களான துறைத்தலைவர்கள் அருளமுதம், மணவாளன், சின்னத்துரை மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X