பொது செய்தி

தமிழ்நாடு

விளைபொருள் விற்பனை கூடம்; விவசாயிகள் வலியுறுத்தல்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'கழிவு நீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படும் நீராக மாற்ற வேண்டும்' என, திண்டுக்கல்லில் விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்க மாநாட்டுக்கு தலைவர் நிக்கோலஸ் தலைமை வகித்தார். ஆலோசகர் சுகுந்தன் முன்னிலை வகித்தார். விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு பெருமாள் முன்னிலை வகித்தனர்.இந்திய விவசாயிகள் மகா சபை

திண்டுக்கல் : 'கழிவு நீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படும் நீராக மாற்ற வேண்டும்' என, திண்டுக்கல்லில் விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்க மாநாட்டுக்கு தலைவர் நிக்கோலஸ் தலைமை வகித்தார். ஆலோசகர் சுகுந்தன் முன்னிலை வகித்தார். விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு பெருமாள் முன்னிலை வகித்தனர்.இந்திய விவசாயிகள் மகா சபை மாநிலப் பொதுச்செயலாளர் சந்திரமோகன், தமிழக விவசாயிகள் சங்க லட்சுமணப்பெருமாள், தமிழர் தேசிய விவசாயிகள் சங்க வீரப்பன், புரவலர் காஜாமைதீன் பேசினர்.

'கிராம சபையில் விவசாய வளர்ச்சிக்கு 150 நாள் வேலையை எப்படி பயன்படுத்தலாம் என திட்டமிட வேண்டும். இடைத்தரகர் தலையீடின்றி அரசு திட்டங்கள் விவசாயிகளுக்கு கிடைக்க வளர்ச்சிக்குழு உருவாக்க வேண்டும்.கழிவு நீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் மாற்ற வேண்டும். சிறு, குறு விவசாயிகளின் விளை பொருட்களை விற்க உள்ளாட்சி மன்றங்கள் விற்பனை கூடங்கள் அமைக்க வேண்டும்' என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X