சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு முகாம்

Added : ஆக 27, 2021
Share
விழுப்புரம்-ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பில் சுய தொழில் தொடங்குவது குறித்து விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு முகாம் நடந்தது.விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் நடந்த முகாமிற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு கடனுதவிக்கான காசோலை வழங்கி பேசியதாவது:தமிழக அரசு, தொழில் முனைவோர்களை

விழுப்புரம்-ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பில் சுய தொழில் தொடங்குவது குறித்து விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு முகாம் நடந்தது.விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் நடந்த முகாமிற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு கடனுதவிக்கான காசோலை வழங்கி பேசியதாவது:தமிழக அரசு, தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு பயிற்சி வழங்குவதுடன், மானியத்துடன் கடனுதவியும் வழங்கி வருகிறது. சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும் என்றால் அனைவரும் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட வேண்டும். கடனுதவி பெற்று தொழில் மேற்கொள்ளும் நீங்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரனமாக விளங்கிட வேண்டும். உங்களை முன்மாதிரியாகக் கொண்டு மற்றவர்களும் இதுபோன்ற வாய்ப்பினை பயன்படுத்தி, மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அனைத்து வங்கியாளர்களுக்கும் ஆர்வமுள்ள தகுதியான தொழில் முனைவவோர்கள் தொழில் தொடங்குவதற்கு கடனுதவி கேட்டு விண்ணப்பித்தால் பரிசீலனை செய்து கடனுதவியை விரைந்து வழங்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் மோகன் பேசினார்.மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தாமோதரன், ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ராஜேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன், இந்தியன் வங்கி ஊரக சுயதொழில் பயிற்சி நிறுவன இயக்குனர் அனிதா, தாட்கோ மாவட்ட மேலாளர் குப்புசாமி, மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சத்தியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X