பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி தலைவர் அதிகாரம் பறிப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
வத்தலக்குண்டு : எழுவனம்பட்டி ஊராட்சி நிதியில் ரூ. 21 லட்சம் முறைகேடு செய்த ஊராட்சி தலைவரின் கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்டது.எழுவனம்பட்டி ஊராட்சி தலைவர் வசந்தா முறைகேடு செய்து இருப்பதாக மாவட்ட கலெக்டரிடம் வார்டு உறுப்பினர்கள் 9 பேர் புகார் அளித்தனர். வத்தலக்குண்டு ஒன்றிய துணை பி.டி.ஓ., ஆய்வு செய்ததில் செலவின சீட்டுகள் இல்லாதது, ரசீது புத்தகம் மூலம் வரிவசூல்

வத்தலக்குண்டு : எழுவனம்பட்டி ஊராட்சி நிதியில் ரூ. 21 லட்சம் முறைகேடு செய்த ஊராட்சி தலைவரின் கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்டது.

எழுவனம்பட்டி ஊராட்சி தலைவர் வசந்தா முறைகேடு செய்து இருப்பதாக மாவட்ட கலெக்டரிடம் வார்டு உறுப்பினர்கள் 9 பேர் புகார் அளித்தனர். வத்தலக்குண்டு ஒன்றிய துணை பி.டி.ஓ., ஆய்வு செய்ததில் செலவின சீட்டுகள் இல்லாதது, ரசீது புத்தகம் மூலம் வரிவசூல் ரூ.68 ஆயிரத்து 422 வங்கியில் செலுத்தாதது தெரிந்தது.

இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்துக்கு ரூ 20 லட்சத்து 65 ஆயிரத்து 550 இழப்பு ஏற்பட காரணமாக இருந்ததாகக் கூறி, தலைவர் வசந்தாவின் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட கலெக்டர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவு: வத்தலக்குண்டு ஒன்றிய பி.டி.ஓ., மற்றும் துணை பி.டி.ஓ.,வுக்கு கையெழுத்திடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.வருங்காலங்களில் முறைகேடு கண்டறியப்பட்டால் பி.டி.ஓ., பொறுப்பாவார். நிதியிழப்பு ஏற்படுத்திய தொகையை உடனடியாக வசூல் செய்ய வேண்டும், என கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X