பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீரில் தன்னிறைவு பெறும் புதிய காவிரி குடிநீர் திட்டம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
வேடசந்துார் : 'புதிய காவிரி திட்டம் மூலம் திண்டுக்கல் மாவட்டம் குடிநீரில் தன்னிறைவு பெறும்' என, வேடசந்துார் எம்.எல்,ஏ., காந்திராஜன் சட்டசபையில் பேசினார்.அவர் பேசியதாவது: குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் காவிரியாற்றில் 2 புதியகிணறுகள் அமைக்கவும், மின் மோட்டார்களை மாற்றவும் ரூ.82.47கோடி மதிப்பில் திட்டம் தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்த திட்டம்

வேடசந்துார் : 'புதிய காவிரி திட்டம் மூலம் திண்டுக்கல் மாவட்டம் குடிநீரில் தன்னிறைவு பெறும்' என, வேடசந்துார் எம்.எல்,ஏ., காந்திராஜன் சட்டசபையில் பேசினார்.

அவர் பேசியதாவது: குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் காவிரியாற்றில் 2 புதியகிணறுகள் அமைக்கவும், மின் மோட்டார்களை மாற்றவும் ரூ.82.47கோடி மதிப்பில் திட்டம் தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்த திட்டம் நிறைவேறினால் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகிடைக்கும். தேர்வு நிலையில் உள்ள பழநி நகராட்சியை, சிறப்பு நிலைக்கு மாற்ற வேண்டும்.

வேடசந்துார் பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்கு மின்வாரிய இடம் தர ஒப்புக் கொண்டனர். அங்குள்ள பயனற்ற சுகாதார துறை கட்டடத்தை மின்வாரியத்திற்கு வழங்கினால், பஸ்ஸ்டாண்டை விரிவுபடுத்தலாம். வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலின் 2 ஏக்கர்நிலத்தை நீண்ட கால குத்தகைக்குபேரூராட்சிக்கு வழங்கினால் பஸ்ஸ்டாண்ட் அமைக்கலாம்.

பூசாரி பட்டியில் 'சிப்காட்' தொழிற்பேட்டை, சுக்காம்பட்டி, அழகாபுரியில் கால்நடை மருத்துவமனைகள், குஜிலியம்பாறைசுகாதார நிலையத்தை, தாலுகா மருத்துவ மனையாக தரம் உயர்த்தவும்வேண்டும்.எரியோடு பேரூராட்சியில் பயணியர் விடுதியும், நெடுஞ்சாலைத் துறைக்கு அலுவலகமும் கட்டவேண்டும். மக்கள் நலப்பணியாளர் 13 ஆயிரத்து 500 பேருக்குமீண்டும் பணி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X