சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலை உறுதித்திட்ட பயனாளிகள் மறியல்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
செஞ்சி-மேல்ஒலக்கூர் ஊராட்சியில் தேசிய வேலை உறுதித் திட்டத்தில் பாரபட்சமாக பணி ஒதுக்குவதாக கூறி பயனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.வல்லம் அடுத்த மேல்ஒலக்கூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நேற்று ஒரு பகுதியினருக்கு வேலை வழங்கினர். வேலை வழங்கப்படாத மற்றொரு தரப்பினர், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சுசீலா தலைமையில் செஞ்சியில்,

செஞ்சி-மேல்ஒலக்கூர் ஊராட்சியில் தேசிய வேலை உறுதித் திட்டத்தில் பாரபட்சமாக பணி ஒதுக்குவதாக கூறி பயனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.வல்லம் அடுத்த மேல்ஒலக்கூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நேற்று ஒரு பகுதியினருக்கு வேலை வழங்கினர். வேலை வழங்கப்படாத மற்றொரு தரப்பினர், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சுசீலா தலைமையில் செஞ்சியில், வந்தவாசி சாலையில் காலை 11:50 மணிக்கு சாலை மறியல் செய்தனர்.தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் மற்றும் வல்லம் ஒன்றிய அதிகாரிகள் மறியல் செய்தவர்களை சமாதானம் செய்து பாரபட்சமின்றி வேலை வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து 12:20 மணிக்கு மறியலை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X