பொது செய்தி

தமிழ்நாடு

பட்டதாரி ஆசிரியர் வலியுறுத்தல்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் மாயவன் தலைமையில் பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷூக்கு கடிதம் அனுப்பினர்.அதில் கூறியிருப்பது: கல்வித்துறை குழப்பங்களுக்கு காரணம் கல்வி மத்திய அரசின் பொதுப்பட்டியலில் இருப்பதே. முன்பிருந்ததை போல் கல்வியை மாநில அரசின் பொதுப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். பள்ளிக்கல்வித் துறையில்

திண்டுக்கல் : தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் மாயவன் தலைமையில் பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷூக்கு கடிதம் அனுப்பினர்.

அதில் கூறியிருப்பது: கல்வித்துறை குழப்பங்களுக்கு காரணம் கல்வி மத்திய அரசின் பொதுப்பட்டியலில் இருப்பதே. முன்பிருந்ததை போல் கல்வியை மாநில அரசின் பொதுப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். பள்ளிக்கல்வித் துறையில் பிரச்னை வராதிருக்க 3 மாதங்களுக்கு ஒரு முறை அமைச்சர், ஆசிரியர் சங்க தலைவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.

ஆசிரியர் - மாணவர் விகிதத்தை 1:25 ஆக குறைக்க வேண்டும். மேல்நிலை வகுப்புகளை போல் 6 - 10 ம் வகுப்புகளுக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் அதில் பட்டம் பெற்ற ஆசிரியரை நியமிக்க வேண்டும்.அரசு நிதி பெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் 1,500 ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும். கலந்தாய்வில் பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வின் போது சொந்த மாவட்டத்தில் காலிப் பணியிடம் இல்லாமல் வேறு மாவட்டங்களுக்கு பதவி உயர்வில் சென்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

உபரி என்ற பெயரில் வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்யப்பட்டோருக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கலந்தாய்வை நடத்த வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X