சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய மாநகராட்சி ஏற்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய மாநகராட்சி ஏற்பாடு

Added : ஆக 27, 2021
Share
திண்டுக்கல் : 'திண்டுக்கல்லில் பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை தினமும் பகுதி வாரியாக சரிசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என, கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.அவர் தெரிவித்தது: மாநகராட்சி 22 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதனை முன் கூட்டியே தடுக்கும் வகையில் தினமும் பகுதி வாரியாக சுத்தம்

திண்டுக்கல் : 'திண்டுக்கல்லில் பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை தினமும் பகுதி வாரியாக சரிசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என, கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.

அவர் தெரிவித்தது: மாநகராட்சி 22 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதனை முன் கூட்டியே தடுக்கும் வகையில் தினமும் பகுதி வாரியாக சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.துணி, பிளாஸ்டிக், பாட்டில்கள் போன்ற திடக்கழிவுகளை கழிவறையில் போடுவதை தவிர்க்க வேண்டும். இன்று (ஆக.27) ராமநாதபுரம், ஆக.28 பிள்ளையார் பாளையம், ஆக.30 எம்.ஜி.ஆர். நகர், நேருஜி நகர், செப்.1 ல் கோவிந்தாபுரம், செப்.2 நாயக்கர் புதுத் தெரு, செப்.3 லட்சுமணபுரம், செப்.4 மவுன்ஸ்புரம், செப்.6 பழநி ரோடு, மாலைக்கட்டி சந்து, கச்சேரி தெரு.செப்.7 ரோமன் மிஷன் சந்துகள், செப்.9 குறிஞ்சி நகர், எல்.எஸ்.காலனி, கருணாநிதி காலனி, செப்.10 ஏ.ஆர்.நகர், செப்.11 எல்.ஜி.பி., காம்பவுண்ட், செப்.13 திருவள்ளுவர் ரோடு, ஆர்.எஸ்.ரோடு, செப்.14 கிருஷ்ணசாமி பிள்ளை சந்து, நெட்டுத் தெரு, கவாடக்கார தெரு,செப்.15 சவுடம்மன் கோயில் தெரு, பள்ளிவாசல் தெரு, செப்.17 அல்லாபிச்சை சந்து, எருமைக்கார தெரு, செப்.18 பாதாளக்காளியம்மன் கோயில் தெரு, செப்.20 அக்னீஸ் மேரி தெரு, செப்.21 மங்களபுரம், செப்.22 என்.வி.ஜி.பி., தியேட்டர் ரோடு, செப்.23 நத்தர்ஷா தெரு, புலவர் சந்து,செப்.25 தாடிக்கொம்பு ரோடு, செப்.27 அசோக் நகர், செப்.28 ஆர்.எம்.காலனி 8, 9 வது குறுக்கு தெரு, செப்.29 எல்.ஐ.சி., காலனியில் சுத்தம் செய்யும் பணி நடக்க உள்ளது, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X