தமிழ்நாடு

தீரவில்லை; கால் நூற்றாண்டாகியும் போக்குவரத்து பிரச்னை...கண்டுகொள்ளாத விழுப்புரம் டிராபிக் போலீஸ்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைப் போக்கிட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் நகரின் போக்குவரத்து நெரிசல் பிரச்னை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரித்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம், கடந்த 1993ம் ஆண்டு புதிதாக உருவாகி, 25 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இன்னமும், மாவட்ட தலைநகரமான
 தீரவில்லை; கால் நூற்றாண்டாகியும் போக்குவரத்து பிரச்னை...கண்டுகொள்ளாத விழுப்புரம் டிராபிக் போலீஸ்

விழுப்புரம்-விழுப்புரம் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைப் போக்கிட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரம் நகரின் போக்குவரத்து நெரிசல் பிரச்னை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரித்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம், கடந்த 1993ம் ஆண்டு புதிதாக உருவாகி, 25 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இன்னமும், மாவட்ட தலைநகரமான விழுப்புரம் மாநகரம், போதிய அளவு விரிவாக்கம் பெறவில்லை. நகரைச் சுற்றி ரிங் ரோடு அமைப்பதற்கான திட்டம், கிடப்பில் உள்ளது.

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கமாகச் செல்லும் கிழக்கு பாண்டி ரோடு, தினந்தோறும் வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. விழுப்புரம் மாதா கோவில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள அரசு கல்லுாரியில் 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் இங்குள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் தினந்தோறும், பள்ளி, கல்லுாரிக்குச் சென்று வர மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.பள்ளிகள் திறக்கப்படும்போது காலை 8:00 மணி முதல் 9:30 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் 5:30 மணி வரையிலும், கிழக்கு பாண்டி ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் இருந்து மாதா கோவில் பஸ் நிறுத்தம் வரை சாலையின் இருபுறமும், கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படவில்லை.

இந்த சாலை மட்டுமின்றி, விழுப்புரம் நகரின் முக்கிய சாலைகளான நேருஜி சாலை, கிழக்கு பாண்டி ரோடு, புதிய பஸ் நிலையம் எதிரில், திருச்சி நெடுஞ்சாலை, சென்னை நெடுஞ்சாலைகளில் நெரிசல் சொல்லி மாளாது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் டிராபிக் போலீசார் அலட்சியம் காட்டி வருகின்றனர்.நகரின் முக்கிய சாலைகளின் இருபுறங்களிலும் இரு சக்கர வாகனங்கள், கார்கள், ேஷர் ஆட்டோக்கள் ஆகியவை தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதேபோன்று, நோ பார்க்கிங் பகுதியிலும், விதிமுறை மீறி வாகனங்களை நிறுத்துகின்றனர்.

குறிப்பாக, டி.ஐ.ஜி., கலெக்டர், எஸ்.பி., தினந்தோறும் வந்து செல்லும் பெருந்திட்ட வளாகம் நுழைவு வாயில் அருகே நோ பார்க்கிங் பகுதி மற்றும் சாலையோரங்களில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.விழுப்புரம் தனி மாவட்டமாக பிரிந்து கால் நுாற்றாண்டாகியும், விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படவில்லை என மக்கள் புலம்பி வருகின்றனர்.எனவே, விழுப்புரம் நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, கலெக்டர், எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X