பழுது; உளுந்தூர்பேட்டை துணை மின் நிலையத்தில்...மின்சாரம் துண்டிப்பால் 50 கிராம மக்கள் அவதி| Dinamalar

தமிழ்நாடு

பழுது; உளுந்தூர்பேட்டை துணை மின் நிலையத்தில்...மின்சாரம் துண்டிப்பால் 50 கிராம மக்கள் அவதி

Added : ஆக 27, 2021
Share
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை பகுதியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் மோட்டார்கள் இயங்காததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.பழுதான மின் மாற்றியை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள், மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.உளுந்துார்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக உளுந்துார்பேட்டை நகர பகுதி, அஜீஸ்
 பழுது; உளுந்தூர்பேட்டை துணை மின் நிலையத்தில்...மின்சாரம் துண்டிப்பால் 50 கிராம மக்கள் அவதி

உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை பகுதியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் மோட்டார்கள் இயங்காததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

பழுதான மின் மாற்றியை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள், மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.உளுந்துார்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக உளுந்துார்பேட்டை நகர பகுதி, அஜீஸ் நகர், உளுந்தாண்டார்கோவில் மற்றும் 230 கி.வோ.. துணை மின் நிலையம் ஆகிய பகுதிகளில் மட்டும் நேற்று முன்தினம் மின் நிறுத்தம் செய்யப்பட்டது.காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை என அறிந்திருந்தனர். ஆனால், இரவு 7:00 மணிக்கு மேல் மின் விநியோகம் செய்யப்பட்டது.சிறிது நேரத்தில், உளுந்துார்பேட்டை துணை மின் நிலையத்தில் உள்ள திறன் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதால் அடிக்கடி மின் நிறுத்தம் ஏற்பட்டது. மேலும், குறைந்த மின் அழுத்த மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.இதனால், நேற்று முன்தினம் இரவு பிள்ளையார்குப்பம் துணை மின் நிலையத்தில் இருந்தும், நேற்று காலை ஆசனுார் துணை மின் நிலையத்தில் இருந்தும் உளுந்துார்பேட்டை பகுதிக்கு மின் விநியோகம் செய்தனர்.மேலும், ஆசனுார், பிள்ளையார்குப்பம், எறையூர், சேந்தநாடு உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெற்று உளுந்துார்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்தும், மின் விநியோகம் சீராகவில்லை.உளுந்துார்பேட்டை நகர பகுதி மட்டுமின்றி, அருகில் உள்ள மூலசமுத்திரம், பு.கொணலவாடி, ஏமம், நத்தகாளி, வெள்ளையூர், ஏ.குமாரமங்கலம், ஆர்.ஆர்.குப்பம், அஜீஸ் நகர் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குறைந்த மின் அழுத்த மின் விநியோகத்தால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இதனால், வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் உள்ள மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை. வீட்டில் உள்ள மின் மின் சாதனங்களும் இயங்கவில்லை.ஏற்கனவே, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட மின் நிறுத்தத்தால் மோட்டார்கள் இயங்காததால் குடிநீர் தொட்டிகளில் ஏற்றப்பட்ட குடிநீர் தீர்ந்து போயின.இதனால், நேற்று குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெகு தொலைவு சென்று குடிநீர் பிடித்தும், வாட்டர் கேன்களை வாங்கியும் பயன்படுத்துகின்றனர்.

ஓட்டல் போன்ற நிறுவனங்கள் டேங்கர் லாரி தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.இதற்கிடையே உளுந்துார்பேட்டை துணை மின் நிலையத்தில் உள்ள திறன் மின்மாற்றியை சீரமைக்க திருச்சி, கள்ளக்குறிச்சியில் இருந்து மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இந்த சீரமைப்பு பணி ஓரிரு நாட்களில் முடிந்து மின் விநியோகம் முறையாக வழங்கப்படும் என மின் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மின் தட்டுப்பாட்டை விரைந்து போக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X