சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கழிவுநீர் கால்வாய் பொதுமக்கள் போராட்டம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
மூங்கில்துறைப்பட்டு-மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மகுண்டத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மகுண்டம் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் காலனியில் 1000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் சாலையில் வழிந்தோடும் அவலம் நீடித்து வருகிறது.இதனால்,

மூங்கில்துறைப்பட்டு-மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மகுண்டத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மகுண்டம் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் காலனியில் 1000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் சாலையில் வழிந்தோடும் அவலம் நீடித்து வருகிறது.இதனால், அப்பகுதி மக்கள் நேற்று ஊராட்சி செயலாளரிடம், இப்பகுதியில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் கழிவு நீருடன் மழைநீர் கலந்து வீட்டிற்குள் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.உடனடியாக கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது, ஊராட்சி செயலாளருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X