பொது செய்தி

தமிழ்நாடு

'கபர்ஸ்தான்' மண்ணை மாற்ற பழநி முஸ்லிம்கள் வலியுறுத்தல்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
பழநி : பழநியில் இறந்தோர் உடலை அடக்கம் செய்ய சிரமமாக உள்ளதால், 'கபர்ஸ்தான்' மண்ணை மாற்ற வேண்டும் என முஸ்லிம் சமுதாயத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.பழநி காமராஜர் நகரில் முஸ்லிம் சமுதாயத்திற்குரிய மயானம் 'கபர்ஸ்தான்' அமைந்துள்ளது. இந்த இடம் 80 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது. பழநியில் வசிக்கும் முஸ்லிம்களின் உடல்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டு வந்தது.தற்போது

பழநி : பழநியில் இறந்தோர் உடலை அடக்கம் செய்ய சிரமமாக உள்ளதால், 'கபர்ஸ்தான்' மண்ணை மாற்ற வேண்டும் என முஸ்லிம் சமுதாயத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

பழநி காமராஜர் நகரில் முஸ்லிம் சமுதாயத்திற்குரிய மயானம் 'கபர்ஸ்தான்' அமைந்துள்ளது. இந்த இடம் 80 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது. பழநியில் வசிக்கும் முஸ்லிம்களின் உடல்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டு வந்தது.தற்போது இப்பகுதியில் மண்ணின் தன்மை மாறியுள்ளது. இதனால் இங்கு அடக்கம் செய்யும் உடல்கள் சில ஆண்டுகள் ஆனாலும் மக்கிப்போவதில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இதுகுறித்து பழநி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்க துணைத்தலைவர் கைசர் கூறிய தாவது: தற்போது கபர்ஸ்தானில் மண்ணின் தன்மை கெட்டுப்போய் உள்ளது. அருகில் குளம் இருப்பதால் உடலை அடக்கம் செய்வதற்கு குழி தோண்டினால் தண்ணீர் வருகிறது. உடலை அடக்கம் செய்தால் அவை மக்கிப்போவதில்லை.

இதனால் உடல்களை அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. சில நாட்களுக்கு முன் பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இந்த இடத்தை ஆய்வு செய்தனர். கபர்ஸ்தான் மண்ணை மாற்ற விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X