சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் 3 வீடுகளில் கொள்ளை முயற்சி

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுாரில் அடுத்தடுத்து மூன்று வீடுகளை உடைத்து, கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் கூத்தப்பாக்கம் நாராயணசாமி நகரில் நேற்று முன் தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் மூன்று வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். வழக்கறிஞர் ராமச்சந்திரன் குடும்பத்துடன் வீட்டிற்குள் துாங்கினார். நேற்று காலை எழுந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு

கடலுார்-கடலுாரில் அடுத்தடுத்து மூன்று வீடுகளை உடைத்து, கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் கூத்தப்பாக்கம் நாராயணசாமி நகரில் நேற்று முன் தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் மூன்று வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். வழக்கறிஞர் ராமச்சந்திரன் குடும்பத்துடன் வீட்டிற்குள் துாங்கினார். நேற்று காலை எழுந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் கதவை திறக்க முடியாததால், மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அருகிலுள்ள மணிவண்ணன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு நகை, பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றமடைந்த மர்ம நபர்கள் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, பக்கத்தில் உள்ள வாசுகி என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த பீரோவை திறந்தனர். அங்கும் நகை, பணம் இல்லாததால் ஏமாற்றமடைந்த மர்மநபர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டு திரும்பியது தெரிந்தது.இது குறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். கடலுாரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X